விண்டோஸ் இயங்குதளத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

சமீபத்தில் நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக, சாம்சங் நிறுவனத்தின் ஆம்னியா-எம் ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரத்தினை பார்ப்போம்.
இதில் உள்ள தொழில் நுட்ப வசதிகள் அனைத்தும் மிக அதிகம் தான். இந்த ஸ்மார்ட்போனில் 4 இஞ்ச் திரை தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த தகவல்களையும் தெளிவாகவும், முழுமையாகவும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த திரையின் மூலமாக 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும். தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.
5 மெகா பிக்ஸல் கேமராவுடன் மொபைல் போட்டிக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் அழகான புகைப்படங்களை வழங்கும். இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். சிறப்பான ஜிபிஆர்எஸ், எட்ஜ் மற்றும் புளூடூத் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக
பயன்படுத்த முடியும்.
ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேர் வசதிக்கும் சிறந்த வகையில் துணை புரியும் இந்த ஸ்மார்ட்போன், விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் சிறந்த ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெறும் என்று கூறலாம். ஸ்டாண்டர்டு எல்ஐ-அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போன், உயர்ந்த தொழில் நுட்பத்திற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.
இந்த ஆம்னியா-எம் ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி, விலை விவரமெல்லாம் இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் வளியாகும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.


Click it and Unblock the Notifications