Home
Mobile

Samsung சக்கை போடு.. Galaxy S25 Edge அறிமுக தேதி அறிவிப்பு.. 5.85மிமீ Slim Phone இல் 200MP கேமரா!

ஒருவழியாக சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge Launch Date) ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல்களுடன் இணையும்.

கேலக்ஸி எஸ்25 எட்ஜ் லான்ச் டேட்: சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்லிம் ஸ்மார்ட்போன் (Slim Smartphone) ஆனது வருகிற மே 13 ஆம் தேதி அன்று தென்கொரிய நேரப்படி காலை 9 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரடிப்படி அதிகாலை 5:30 மணிக்கு நடைபெறும்.

Samsung சக்கை போடு.. Galaxy S25 Edge அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு குறித்த அழைப்பில் இது "ஒரு ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனை விட அதிகம்" என்றும்.. "ஒவ்வொரு வளைவிலும், விளிம்பிலும் மற்றும் காம்போனென்ட்டிலும்" என்றும்.. "எஸ் சீரிஸ் பெயருக்கு தகுதியான பிரீமியம் அனுபவத்தை உருவாக்க துல்லியமான என்ஜினீயரிங்கில் ஒரு திருப்புமுனை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றை விட முக்கியமாக, இகில் 200எம்பி ப்ரைமரி சென்சார் (200MP Primary Sensro) இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக நிச்சயமாக இது உயர்ந்த கேமரா அனுபவம் மற்றும் தொழில்முறை அம்சங்கள் மற்றும் திறன்களை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாமா. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான ஏஐ அம்சங்களும் இருக்கும்.

இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்? இது மே 23 ஆம் தேதிக்குள் சீனா மற்றும் கொரியாவில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மே 30 ஆம் தேதிக்கு பின்னர், இந்தியா உட்பட மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதுகுறித்த சரியான விவரணைகள் மே 13 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்த ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மாடல் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 1,19,606 க்கும், மறுகையில் உள்ள 512 ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.1,31,098 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஐசி ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் உள்ளிட்ட பல கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 3120 × 1440 ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே
- டிஸ்பிளேவின் கீழே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 12ஜிபி ரேம்
- 256ஜிபி அல்லது 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் உடனான 200எம்பி ப்ரைமரி கேமரா
- இது எஸ்25 அல்ட்ரா மாடலில் காணப்படும் அதே 1/1.3-இன்ச் யூனிட் ஆகும், இது உயர்தர 2x ஜூம் ஷாட்களை வழங்கும் திறன் கொண்டது.

- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12எம்பி அல்ட்ரா-வைட் சென்சார்
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12எம்பி செல்பீ கேமரா
- இது 1/3.2-இன்ச் S5K3LU சென்சாரை பயன்படுத்துகிறது
- 5.85 மிமீ ஸ்லிம் டைட்டானியம் பிரேம்
- பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
- முன்பக்கம் கொரில்லா கிளாஸ் செராமிக் 2

- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 7
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 7

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Officially Confirmed Galaxy S25 Edge Smartphone Launch Date Its May 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X