உடைந்த ஸ்க்ரீனை ரூ.990/-க்கு மாற்றித்தரும் வாய்ப்பை சாம்சங் அறிவித்துள்ளது.!

12 மாதங்களை கடந்த உடைந்த ஸ்க்ரீன் கொண்ட சாம்சங் கருவிகளால் மட்டுமே இந்த வாய்ப்பை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

|

சாம்சங் இந்தியா அதன் ஸ்மார்ட்போன்களின் மீதான 'நெவர் மைண்ட்' சலுகை வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் கீழ் குறிப்பிட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு வெறும் ரூ.990/-க்கு ஒருமுறை ஸ்க்ரீன் மாற்றம் நிகழ்த்தப்படும். 12 மாதங்களை கடந்த உடைந்த ஸ்க்ரீன் கொண்ட சாம்சங் கருவிகளால் மட்டுமே இந்த வாய்ப்பை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.990/-க்கு உடைந்த ஸ்க்ரீன் மாற்றித்தரப்படும் : சாம்சங் அறிவிப்பு.!

'நெவர் மைண்ட்' சலுகையின்கீழ், சாம்சங் நுகர்வோர்கள் ரூ.990/-க்கு இந்த பழுது பார்க்கும் வாய்ப்பை செப்டம்பர் 21, 2017 மற்றும் அக்டோபர் 21, 2017 ஆகியவற்றிற்கு இடையில் நிகழ்த்திக்கொள்ளலாம்.

மேலும் மிக முக்கியமாக இந்த சலுகையின் கீழ் கொண்டுவரப்பப்டும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ரூ.9,000/-க்கு மேல் என்ற விலை நிர்ணயம் கொண்டு வாங்கப்பட்டிருக்க வேண்டும். சாம்சங் கேலக்ஸி ஜே, கேலக்ஸி ஏ, கேலக்ஸி சி, கேலக்ஸி ஆன், கேலக்ஸி எஸ் மற்றும் கேலக்ஸி நோட் ஆகிய சாதனங்கள் அடங்கும்.

ரூ.990/-க்கு உடைந்த ஸ்க்ரீன் மாற்றித்தரப்படும் : சாம்சங் அறிவிப்பு.!

"இந்தத் திட்டத்தின் வழியாக, எங்களின் நுகர்வோர்களுக்கு மன அமைதியை வழங்குகிறோம்" என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அசீம் வார்ஸி நிருபர்களிடம் கூறினார். மேலும் "'கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் ஆகியவற்றிற்கு கர்நாடக மக்கள் அளித்த வரவேற்பை மனதிற் கொண்டே இந்த சலுகை நெவர் மைண்ட் வாய்ப்பை வழங்குகிறோம்" என்றும் அவர் கூறினார்.

"சாம்சங் பே ஆப்பை, 1.5 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள், அது மிகவும் பிரபலமாகி வருகிறது. இனி சாம்சங் பயனர்கள் தங்களது பிஸிக்கல் கார்டுகளை கையேடு வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது" என்றும் அவர் கூறினார்.

Best Mobiles in India

English summary
Samsung Offers One-Time Screen Replacement for Select Smartphones at Rs. 990. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X