Home
Mobile

இதுக்கு தான் Samsung போன்களை வாங்குனும்றது.. 40 Galaxy மாடல்களுக்கு Android 14 அப்டேட்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

வெளியான வேகத்தில், "டக்கு டக்குனு" லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்களை வெளியிடுவதில் சாம்சங் (Samsung) நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, சமீபத்திய ஆண்ட்ராய்டு அப்டேட்டை வேகமாக வெளியிடுவதில், சாம்சங் பெயர்போன நிறுவனமாக திகழ்கிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்நிறுவனம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் இணக்கமான அனைத்து கேலக்ஸி போன்களையும் அப்டேட் செய்துவிட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகமான ஆண்ட்ராய்டு 14 அப்டேட் ஆனது 40க்கும் மேற்பட்ட கேலக்ஸி மாடல்களுக்கு புயல் வேகத்தில் வந்துசேரவுள்ளது.

40 Samsung Galaxy மாடல்களுக்கு Android 14 அப்டேட்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

மேலும், சாம்சங் போன்களுக்கு வரும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் ஆனது சாம்சங்கின் லேட்டஸ்ட் ஒன் யுஐ 6.0 அப்டேட் (One UI 6.0 Update) வருமென்பதில் சந்தேகமே வேண்டாம். அப்படியாக இம்மாத தொடக்கத்தில் கூகுள் (Google) நிறுவனம் அறிவித்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் ஆனது எந்தெந்த சாம்சங் கேலக்ஸி மாடல்களுக்கு வரும்?

முதலில் சாம்சங் நிறுவனத்தின் புதிய புதுப்பிப்பு கொள்கைக்கு (New Update Policy) ஒரு நன்றியை கூறிவிடுவோம். ஏனென்றால் அதன் வழியாகத்தான் எந்தெந்த கேலக்ஸி போன்கள் மற்றும் கேலக்ஸி டேப்லெட்டுகளுக்கு புதிய ஓஎஸ் அப்டேட்டை பெறும் என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது மிகவும் எளிதாகிவிட்டது

எந்தெந்த கேலக்ஸி எஸ் சீரீஸ் போன்களுக்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்? கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்23 பிளஸ், கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்22 பிளஸ், கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்21 எஃப்இ, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்21 பிளஸ், கேலக்ஸி எஸ்21.

எந்தெந்த கேலக்ஸி இஸட் சீரீஸ் போன்களுக்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்? சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 4, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 3, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 3.

எந்தெந்த கேலக்ஸி ஏ சீரீஸ் போன்களுக்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்? கேலக்ஸி ஏ73, கேலக்ஸி ஏ72, கேலக்ஸி ஏ54, கேலக்ஸி ஏ53, கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ52 5ஜி, கேலக்ஸி ஏ52எஸ், கேலக்ஸி ஏ34, கேலக்ஸி ஏ33, கேலக்ஸி ஏ24, கேலக்ஸி ஏ23, கேலக்ஸி ஏ14, கேலக்ஸி ஏ13, கேலக்ஸி ஏ04எஸ்

எந்தெந்த கேலக்ஸி எம் & எஃப் சீரீஸ் போன்களுக்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்? சாம்சங் கேலக்ஸி எம்54, கேலக்ஸி எம்53 5ஜி, கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி எம்23, கேலக்ஸி எஃப்54, கேலக்ஸி எஃப்23, சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி.

எந்தெந்த கேலக்ஸி டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்? சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் ஆனது கேலக்ஸி டேப்லெட்களுக்கும் வரவுள்ளது. அவைகள் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா, கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8.

பின்குறிப்பு: மேற்கண்ட போன்கள் / டேப்லெட்கள் எல்லாமே சாம்சங்கின் அப்டேட் பாலிசியின் அடிப்படையிலான பட்டியல் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது மேற்கண்ட எல்லாமே நான்கு ஆண்டுகள் வரை ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் மாடல்கள் ஆகும். அதிகாரப்பூர்வ பட்டியலை சாம்சங் இன்னும் வெளியிடவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung New Update Policy Lot of Galaxy Phones To Get Latest Android 14 Update with One UI 6.0
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X