Just In
- 17 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 20 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 20 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 21 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பெர்லின் வர்தக விழாவில் சாம்சங்கின் அதிரடி ஓபனிங்!!!
டெக்னாலஜி உலகமே அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்த IFA 2013 பெர்லின் விழாவை பற்றி முன்பே கூறியிருந்தோம். நேற்று செப்டம்பர் 4 ஆம் தேதி மாலையில் இருந்தே பல முன்னனி நிறுவனங்கள் தங்களது படைப்புகளை இந்த விழாவில் வெளியிட்டு வருகின்றனர்.
சாம்சங் நிறுவனம் உலக அளவில் முன்னனி நிறவனமாக இருப்பதால் இந்நிறுவனம் எந்தெந்த புதிய படைப்புகளை இந்த விழாவில் வெளியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு தொழில்நுட்ப உலகில் அதிகமாக நிலவியது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட்3 , சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச், சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 உட்பட இன்னும் பல சாதனங்களை சாம்சங் நிறுவனம் IFA 2013 பெர்லின் விழாவில் வெளியிட்டு டெக் உலகை அதிரவைத்துள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் கலாச்சாரம் இப்பொழுது பிரபலமாகி வருகிறது அதனால் சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. எதிர்பார்ப்புக்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் புதிதாக வெளியிடப்பட்ட ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் வெளிவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடக்கும் IFA 2013 பிரம்மாண்ட விழாவில் வெளியான அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங்கின் இந்த புதிய படைப்புகள் பற்றிய படங்கள் மற்றும் இன்னும் பிற தகவவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி நோட்3 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.

சாம்சங் கேலக்ஸி நோட்3
5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 2.3GHZ ஸ்னாப்டிராகன் 800 சிப்ஷெட் மற்றும் 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் என இது இரண்டு வெர்ஷன்களில் வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்3
13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்3
கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி நோட்3
IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன

சாம்சங் கேலக்ஸி நோட்3
கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி நோட் 10.1
கேலக்ஸி நோட் 10.1, 10இன்ஞ் சூப்பர் கிளியர் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது இதன் ரெசலூஸன் 2560*1600 பிக்சல்ஸ் ஆகும். மேலும் இதில் 1.9GHZ ஆக்டா கோர் பிரசாஸர் மற்றும் 3ஜிபி ராம் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி நோட் 10.1
WiFi மட்டும், WiFi மற்றும் 3ஜி, WiFi மற்றும் LTE என கேலக்ஸி நோட் 10.1 மூன்று வெர்ஷன்களில் வந்துள்ளது. 16ஜிபி, 32ஜிபி, 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களில் இவைகள் வருகின்றன. இதில் 64 ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரியும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10.1
8 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 8,220mAh பேட்டரி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10.1
கேலக்ஸி நோட் 10.1ல் எஸ் பென் (s pen) என்று அழைக்கப்படும் ஸ்டைலஸ் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10.1
இதில் நிறைய புதுமையான அப்ளிகேஷன்கள் பிரி லோட் செய்யப்பட்டு வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்
கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்
800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்
கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9மெகாபிக்சல் கேமரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள ரப்பர் வாரை பல வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங்கன் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470