Home
Mobile

மொத்த மொபைல் கூட்டமும் காலி.. நச் விலையில் Samsung கேலக்ஸி Z Fold 5, கேலக்ஸி Z Flip 5 அறிமுகம்!

2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக இன்று (ஜூலை 26) அறிமுகமாகின. சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2023 நிகழ்வின் (Samsung Galaxy Unpacked Event) போது நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் போன்களாக கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 7.6-இன்ச் QXGA+ (2176 x 1812 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் 1Hz மற்றும் 120Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவும் உள்ளது. இதில் 6.2-இன்ச் FHD+ (2316 x 904 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவும் உள்ளது.

நச் விலையில் Samsung கேலக்ஸி Z Fold 5, கேலக்ஸி Z Flip 5 அறிமுகம்!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது. அதில் டூய்ல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எஃப்/1.8 உடனான 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 10எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.

செல்பீ கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்பிளேவில் 10-மெகாபிக்சல் கேமரா (எஃப்/2.2) உள்ளது அதே நேரத்தில் இன்னர் டிஸ்பிளேவில் 4 மெகாபிக்சல் இன்னர் டிஸ்பிளே கேமரா (எப்/1.8) உள்ளது. 4400எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் 25W அடாப்டர் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.7-இன்ச் FHD+ (1080x 2640 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளேவை (120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்) கொண்டுள்ளது. கூடவே 3.4-இன்ச் சூப்பர் AMOLED ஃபோல்டர்-ஷேப்டு கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் பிளாட்ஃபார்மின் கீழ் இயங்குகிறது

கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா யூனிட்டுடன் வருகிறது. அதில் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ப்ரைமரி கேமரா + 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உள்ளது. செல்பீக்களுக்கான இதில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது; இது ஃபோல்டிங் டிஸ்பிளேவின் மேல் வைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 3700mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 விலை நிர்ணயம்: சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,47,600 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜின் விலையாகும். இந்த ஸ்மார்ட்போன் 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் வாங்க கிடைக்கும்.

கிரீம், ஐசி ப்ளூ மற்றும் ஃபாண்டம் பிளாக் கலர்களில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஆனது சாம்சங்.காம் இணையதளம் வழியாக ப்ளூ மற்றும் க்ரே கலர்களிலும் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன், குறிப்பிட்ட சில சந்தைகளில் மட்டும் இன்று முதல் ப்ரீ-ஆர்டர்களை தொடங்குகிறது. இது வருகிற ஆகஸ்ட் 11 முதல் விற்பனைக்கு வரும்.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 விலை நிர்ணயம்: சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.82,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளூ, கிரீம், கிராஃபைட், க்ரே, க்ரீன், லாவெண்டர், மின்ட் மற்றும் எல்லோ கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் ஆகஸ்ட் 11 முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung New Galaxy Z Fold 5 and Galaxy Z Flip 5 Launched Officially Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X