Home
Mobile

அசந்த கேப்புல Apple-க்கு ஆப்படித்த Samsung.. புதிய Polar ID அம்சம்.. என்ன யூஸ்? எந்தெந்த போன்களுக்கு வரும்?

ரூ.8000 க்கும், ரூ.10,000 க்கும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதால் சாம்சங் (Samsung) நிறுவனமானது ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு போட்டியில்லை என்றாகி விடாது. ரூ.1,29,999 க்கு வாங்க கிடைக்கும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra) உட்பட சாம்சங்கின் மற்ற பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வைத்தே, இதெப்படி ஆப்பிள் உடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதுகிறது என்பதை எடைபோட்டு பார்க்க முடியும். இந்த அடிப்படையில், சாம்சங் நிறுவனம் ஆப்பிளின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றான பேஸ் ஐடி-க்கு (Face ID) போட்டியாக புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும்போது அதில் புதிய முக அங்கீகார தொழில்நுட்பத்தை (New facial recognition technology) அறிமுகப்படுத்தும். ரூ.1 லட்சத்திற்கு மேல் என்கிற விலை நிர்ணயத்தை கொண்டிருந்தாலும் கூட சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் போன்களில் (Flagship Phones) ஆப்பிளின் பேஸ் ஐடி போன்ற பிரத்யேக சென்சார் எதுவும் இடம்பெறவில்லை.

அசந்த கேப்புல Apple-க்கு ஆப்படித்த Samsung.. புதிய Polar ID அம்சம்!

ஆனால் ஆப்பிள் நிறுவனமோ அதன் ஃபேஸ் ஐடி-க்காக அதன் ட்ரூடெப்த் கேமரா மற்றும் கூடுதல் சென்சார்களை (TrueDepth camera and additional sensors) பயன்படுத்துகிறது. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக மொபைல் டிவைஸ்களில் உள்ள முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்திற்கான முன்னோடியாக பேஸ் ஐடி உள்ளது. ஆனால் இந்நிலை விரைவில் மாறக்கூடும்.

எக்ஸ் தளம் (X Platform) வழியாக டிப்ஸ்டர் ஹைசாகி ரியோஹே (Tipster Haizaki Ryouhei) பகிர்ந்துள்ள தகவலின்படி சாம்சங் நிறுவனம் போலார் ஐடி (Polar ID) எனப்படும் புதிய முக அங்கீகார தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் ப்ரீமார்க்கெட் நிலையை (PreMarket Level) எட்டியுள்ளது, அதாவது இது ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்பப்படுவதற்கு தயாராக இருக்கும் ஒரு நிலையாகும்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சாம்சங்கின் போலார் ஐடி அம்சத்திற்கு முகத்தை அடையாளம் காண பிரத்யேக சென்சார்கள் (Dedicated sensors) தேவையில்லை. மாறாக, இது ஸ்னாப்டிராகன் சிப்செட்டையும் (Snapdragon chipset), சாம்சங் எல்எஸ்ஐ-யின் திறன்களையும் (capabilities of Samsung LSI) சார்ந்துள்ளது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்.. கேலக்ஸி எஸ் சீரிஸ் அல்ட்ரா மாடல்களில் கூடுதல் சென்சார்களை சேர்க்க தேவை இல்லாமல், அதே ஹோல் பஞ்ச் வடிவமைப்பை (Hole Punch Cutout Design) தக்கவைக்கவும் முடியும்; கூடவே பேஸ் ஐடி போன்ற போலார் ஐடி அம்சத்தையும் சேர்க்க முடியும்.

இதற்காக கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போனில்.. துல்லியமான இயக்க கண்காணிப்பை (Precise motion tracking) வழங்கும் உலகளாவிய ஷட்டர் இமேஜ் சென்சார் (Global shutter image sensor) ஆன ஐசோசெல் விஸன் 931 (ISOCELL Vizion 931) பயன்படுத்தப்படலாம் என்றும் ரியோஹே கூறியுள்ளார்.

கூடவே ஆப்பிள் ஐபோன்களில் உள்ள பேஸ் ஐடி அம்சத்தை விட சாம்சங்கின் போலார் ஐடி ஆனது "இன்னும் பாதுகாப்பானதாக" (More Secure) இருக்கும் என்றும் ரியோஹே கூறியுள்ளார். அதாவது இது மற்ற முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை விட சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்துகிறார்.

இருப்பினும், சாயர் கேலோக்ஸ் (Sawyer Galox) என்கிற மற்றொரு டிப்ஸ்டர் இந்தக் கூற்றுக்களுக்கு முரணாக, போலார் ஐடி தொழில்நுட்பம் இன்னும் தயாராகவில்லை என்றும், இது சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனில் தான் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

இது உண்மையாகவும் பட்சத்தில் ஆப்பிள் பேஸ் ஐடி க்கு போட்டி ஆன சாம்சங்கின் போலார் ஐடி ஆனது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகமாகும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சாம்சங் நிறுவனம் இன்னமும் அதன் போலார் ஐடி குறித்து எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung New Facial Recognition Technology Polar ID in Galaxy S26 Ultra to Compete Apple Face ID
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X