மொத்த சீன கும்பலுக்கும் செக்மேட்.. 6000mAh பேட்டரி.. 6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் Samsung-ன் மலிவு விலை 5G போன்!
பட்ஜெட் விலை 5ஜி போன்கள் (Afforadble 5G Phones) என்று கூறினாலே.. "நாங்க தான் பா கெத்து!" என்று கூறிய சீன நிறுவனங்களை "கொத்தாக" தூக்கும்படியான ஒரு சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 24 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதென்ன ஸ்மார்ட்போன்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி (Samsung Galaxy F14 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் தான் சாம்சங்கின் மிட்-ரேன்ஜ் மாடல்களாக கேலக்ஸி ஏ34 5ஜி (Galaxy A34 5G) மற்றும் கேலக்ஸி ஏ54 5ஜி (Galaxy A54 5G) அறிமுகம் செய்யப்பட்டன.

இது என்ன விலைக்கு வரும்? 2 புதிய 5ஜி போன்களை அறிமுகம் செய்த கையோடு சாம்சங் மேலுமொரு 5ஜி போனை வருகிற மார்ச் 24இல் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. சுவாரசியமாக இது ரூ.15,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் வெளியாக உள்ளது. இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்களும் பகிரப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஃப்14 5ஜி போனின் அம்சங்கள்: அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படவுள்ள இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனிற்காக, பிரத்யேக மைக்ரோசைட் (Microsite) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக கேலக்ஸி எஃப்14 5ஜி போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.
இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) ப்ரொடெக்ஷன் உடனான 6.6-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை (FHD+ Display) கொண்டிருக்கும். மேலும் இது 5என்எம் எக்ஸிநோஸ் 1330 (5nm Exynos 1330) சிப்செட்டை கொண்டுருக்கும். சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த சிப்செட் ஒரு நல்ல கேமிங் அனுபவத்தை (Gaming Experience) வழங்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த போனில் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து ரேம்-ஐ "கடன் வாங்கும்" ரேம் பிளஸ் (RAM Plus) அம்சமும் இடம்பெறும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 5.0 உடன் வரும் இந்த சாம்சங் போனிற்கு 2 வருட மேஜர் அப்டேட்ஸ், 4 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, கேலக்ஸி எஃப்15 5ஜி ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 6,000mAh பேட்டரி பேக் செய்யப்படும் மற்றும் அது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான (Fast Charging) ஆதரவையும் வழங்கும். சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்தால், அது சுமார் 2 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.
மொத்தம் 13 5ஜி பேண்ட்களுக்கான (5G Bands) ஆதரவுடன் வரும் கேலக்ஸி எஃப்154 5ஜி ஸ்மார்ட்போனானது க்ரீன், லாவண்டர் மற்றும் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்க்ளில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் உறுதிசெய்யப்பட்டு விட்டாலும் கூட, இதன் சரியான விலை நிர்ணயம் இன்னும் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அது ரூ.15,000 க்குள் தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








