Home
Mobile

யார் சாமி இவன்? வெறும் ரூ.8499 க்கு 8GB RAM போனை இறக்கி விட்டுருக்கான்! டிச.16 முதல் விற்பனை பிச்சிக்க போகுது!

நேற்று வரையிலாக, 8ஜிபி ரேம்-ஐ பேக் செய்யும் ஒரு ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,499 தான் என்று கூறினால் யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று நம்புவார்கள்!

ஏனென்றால் வெறும் ரூ.8,499 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 8GB RAM உள்ளது.

அதுமட்டுமின்றி 5000mAh பேட்டரி, வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் உடனான 6.5-இன்ச் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா செட்டப், பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் என.. விலையை மீறிய பல அம்சங்களும் இருக்கிறது!

பட்ஜெட் மொபைல் பிரிவை ஒரு கலக்கு கலக்க போகிறது!

பட்ஜெட் மொபைல் பிரிவை ஒரு கலக்கு கலக்க போகிறது!

நாம் இங்கே பேசுவது சாம்சங் நிறுவனத்தின் எம் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போனை பற்றித்தான்.

மேலே குறிப்பிட்ட அம்சங்களை வைத்தே.. இது பட்ஜெட் மொபைல் பிரிவை ஒரு கலக்கு கலக்க போகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் இன்னும் நிறைய அம்சங்கள் உள்ளன!

பெரிய டிஸ்பிளே.. எக்கச்சக்கமான ஸ்டோரேஜ்!

பெரிய டிஸ்பிளே.. எக்கச்சக்கமான ஸ்டோரேஜ்!

அம்சங்களை பொறுத்தவரை, Samsung Galaxy M04 ஆனது HD+ ரெசல்யூஷன் உடனான 6.5-இன்ச் PLS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 (Helio P35) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4GB ரேம் மற்றும் 4GB வரையிலான ரேம் பிளஸ் (விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128B வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும், எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரையிலான ஸ்டோரேஜையும் வழங்கும்.

நீண்ட காலத்திற்க்கான ஓஎஸ் அப்டேட்.. பேட்டரி லைஃப்!

நீண்ட காலத்திற்க்கான ஓஎஸ் அப்டேட்.. பேட்டரி லைஃப்!

ஆண்ட் ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) அடிப்படையிலான OneUI 4.1 உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வரையிலான அப்டேட் கிடைக்கும் என்று சாம்சங் உறுதி அளித்துள்ளது.

கேலக்ஸி M04 ஆனது வெறும் 10W சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கிறது என்றாலும் கூட, இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஒரு நாள் முழுவதுமான பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என்பதில் சந்தகமே வேண்டாம்.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் கேலக்ஸி எம்04 ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. இதனுடன் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம், 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது.

டிசம்பர் 16 ஆம் தேதி ரெடியா இருங்க!

டிசம்பர் 16 ஆம் தேதி ரெடியா இருங்க!

சாம்சங் நிறுவனத்தின் Galaxy M04 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த விற்பனை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் வழியாக நடக்கும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 64GB ஆப்ஷன் ஆனது ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன், சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும் (அதே தேதி, அதே நேரத்தில்) வாங்க கிடைக்கும்!

கூடிய விரைவில் புது 5ஜி போன் ஒன்றும் வருகிறது!

கூடிய விரைவில் புது 5ஜி போன் ஒன்றும் வருகிறது!

கேலக்ஸி எம்04 மாடலை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ14 (Galaxy A14) என்கிற புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், டைமன்சிட்டி 700 சிப்செட், 5000mA பேட்டரி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தகவல் இல்லை!

Best Mobiles in India

English summary
Samsung New 8GB RAM Phone Galaxy M04 Launched In India for Just Rs 8499 Sale Starts From December 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X