300 மில்லியன் மொபைல்போன்களை விற்று சாம்சங் சாதனை!

இந்த ஆண்டு இதுவரை 300 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்து சாம்சங் சாதனை படைத்துள்ளது. மொபைல்போன் விற்பனையில் சாம்சங் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, அதன் கேலக்ஸி வரிசை
ஸ்மார்ட்போன்கள் சாம்சங் விற்பனையின் ஏற்றத்திற்கு பெரிதும் துணைபுரிகின்றன. மேலும், நாட்டுக்கு நாடு மக்களின் ரசனை வேறுபட்டாலும், சாம்சங் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாடலாக மாறிவிட்டது. இதனால், சாம்சங் மொபைல்போன் விற்பனை பல புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.
இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை 300 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.கடந்த ஆண்டு 280 மில்லியன் விற்பனையை தொட்ட சாம்சங் நிறுவனம், இந்த ஆண்டு 300 மில்லியன் என்ற புதிய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் மட்டும் 10 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்ந்த தொழில்நுட்பத்துடன் வரும் சாம்சங் எஸ்-2 உலக அளவில் அமோக வரவேற்பை பெற்ற மாடலாக திகழ்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் அதிக வரவேற்பை பெற்று அளவிற்கு உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கம்பீரமாக உலா வந்து கொண்டிருக்கிறது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்மொபைல்.
இந்த நிலையில், உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட புதிய மாடல்களோடு அடுத்த ஆண்டு விற்பனையில் புதிய மைல்கற்களை எட்டிபிடிக்க திட்டமிட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications