முன்பக்கத்தில் மூன்று செல்ஃபி கேமரா.. மிரட்டலான டிசைனுடன் சாம்சங்.. வரைபடம் இதோ..
சாம்சங் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனின் காப்புரிமை படங்களில் மூன்று முன்பக்க கேமராவை கொண்ட ட்ரிபிள் செல்ஃபி கேமரா அமைப்பை வடிவமைத்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த டர்பில் செல்ஃபி கேமரா அமைப்பு பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

மூன்று முன்பக்க கேமரா
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் டிசைன் செய்து வரும் அதன் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடலில் மூன்று முன்பக்க கேமரா தொகுதியை அறிமுகம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், சாம்சங் டிசைன் செய்துள்ள அந்த ஸ்மார்ட்போனின் காப்புரிமை படத்தில், முன்பக்க பஞ்ச் ஹோல் வடிவமைப்பில் மூன்று கேமரா அமைப்பு இருப்பதாக டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது.

மூன்று முன் கேமராவிற்கான இரண்டு மாறுபாடுகள்
டிப்ஸ்டர் முகுல் சர்மா வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, ஒவ்வொரு கேமரா சென்சாருக்கும் டிஸ்பிளேவில் மூன்று தனிப்பட்ட துளைகளைப் பயன்படுத்தியுள்ளது. இது முன்பக்கத்தில் மூன்று செல்ஃபி கேமரா அமைப்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மூன்று முன் கேமராவிற்கான இரண்டு வெவ்வேறு மாறுபாடுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் ஒன்று மேல் வலது மூலையிலும் மற்றொன்று எதிர் மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
மூன்று முன்பக்க செல்ஃபி கேமரா டிசைன்
இந்த சாம்சங் புளூபிரிண்ட் படங்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் முகுல் சர்மா பகிர்ந்துள்ளார். சாம்சங் நிறுவனம் மூன்று முன்பக்க செல்ஃபி கேமரா தொகுதியைச் சோதிப்பது பற்றி வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை. ஆனால், பொதுவான ஊகங்கள் சாம்சங் முதன்மை முன் கேமராவிற்கு உயர்-தெளிவுத்திறன் கொண்ட பிரதான சென்சாரைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிளாக் அண்ட் வைட் சென்சாரா?
அதேபோல், மற்ற இரண்டு சென்சார்களில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் உடன் வரக்கூடும் என்றும், மூன்றாவது கேமரா பிளாக் அண்ட் வைட் சென்சாராக இருக்கலாம் அல்லது அது டெப்த் சென்சாராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், சாம்சங் நிறுவனத்திடம் இப்போது வரை ஒரு முன்பக்க டூயல் செல்ஃபி கேமரா அமைப்பு ஸ்மார்ட்போன் கூட இல்லை என்பதே உண்மை.

கேமரா கலாச்சாரத்தை மாற்ற துடிக்கும் சாம்சங்
இப்படி இருக்கையில் ட்ரிபிள் செல்ஃபி கேமரா அமைப்பு வடிவமைக்கப்பட்டிருப்பது எதற்கு என்பது தான் கேள்வியாக உள்ளது. இப்போது ஸ்மார்ட்போன் சந்தையில், ஒன்பிளஸ் நோர்ட், ஒப்போ ரெனோ 3 புரோ, ரியல்மி 6 ப்ரோ போன்ற குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே டூயல் செல்ஃபி கேமரா அமைப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சாம்சங்கின் டிசைன் சாத்தியமானால் ஸ்மார்ட்போனின் கேமரா கலாச்சாரம் இன்னும் ஒருபடி முன்னேறிச் சென்றுவிடும்.


Click it and Unblock the Notifications