Home
Mobile

சொல்லவே இல்ல: இந்தியாவில் உற்பத்தியா? விரைவில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போன்- எப்போது அறிமுகம்?

சாம்சங் சாதனத்தில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கலாம் என வதந்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்சங்கின் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்

சாம்சங்கின் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்

சாம்சங்கின் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. அதன்படி வரவிருக்கும் சாதனத்தின் பெயர் சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த புதிய கசிவுகள் இணையத்தில் வெளிவந்திருக்கின்றன. சாம்சங்கின் புதிய சாதனம் நான்கு மடங்கு கூடுதல் கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் உடல் அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. நிறுவனம் முன்னதாகவே இந்தியாவில் உள்ள சாம்சங் ஃபெசிலிட்டியில் அதன் உற்பத்தியை தொடங்கிவிட்டது என வதந்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த தகவல் எதையும் நிறுவனம் வெளியிடப்படவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போனானது 5ஜி மாறுபாட்டுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி விவரக்குறிப்புகள்

91 மொபைல்ஸ் அறிக்கையின்படி, கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் உடல் மற்றும் பளபளப்பான பூச்சு வடிவமைப்போடு வரும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போனானது சீரமைக்கப்பட்ட நான்கு மடங்கு கூடுதல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது யூஎஸ்பி டைப் சி போர்ட்டை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் ஆடியோ வெளியீட்டிற்கு என 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழே ஸ்பீக்கர் கிரில் இடம்பெறும் என கூறப்படுகிறது. வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக், வெள்ளை மற்றும் ஆரஞ்ச் வண்ண விருப்பத்தில் வரும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி சாதனம் குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

முதல் 5ஜி பட்ஜெட் சாதனமா?

முதல் 5ஜி பட்ஜெட் சாதனமா?

சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போனானது SMA135F மாடல் எண்ணைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஸ்மார்ட்போன் 5ஜி மாறுபாடு SM-A136B என்ற மாடல் எண்ணை கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த மாடலின் 5ஜி மாறுபாடானது சாம்சங் அறிமுகம் செய்த முதல் 5ஜி பட்ஜெட் சாதனமாக இருக்கும் என கூறப்பட்டாலும் தயாரிப்பாளர்களால் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டின் இறுதியில் ஏதாவது ஒரு தேதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் முன்னதாக கேலக்ஸி ஏ13 5ஜி ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது இதில் இந்த சாதனம் மீடியாடெக் 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

பின்புறம் 50எம்பி மெயின் கேமரா

பின்புறம் 50எம்பி மெயின் கேமரா

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த சாதனம் 50எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி

குறிப்பாக கேலக்ஸி ஏ13 5ஜி இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆதரவு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது . பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இதுதவிர கேமிங் வசதிக்கு என்றே தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Samsung Might Be Started its Samsung Galaxy A13 4G Production in India: Expected details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X