Home
Mobile

குறைந்த விலையில் வரும் சாம்சங் மொபைல்போன்

By Super
குறைந்த விலையில் வரும் சாம்சங் மொபைல்போன்
மெகாகேம் சேம்ப் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். ஏராளமான டச் ஸ்கிரீன் மொபைல்கள் இந்திய சந்தையில் தினம் குவிந்து கொண்டிருக்கின்றது. அனைத்து மொபைல்களும் எந்த அளவு தரம் வாய்ந்தது என்று கூறுவது கடினம்.

சாம்சங் மெகா சேம்ப் மொபைல் குறைந்த விலையில் தரமான வசதிகளை வழங்குகிறது என்று தாராளமாகக் கூறலாம். இது 2.4 இஞ்ச் திரை வசதி கொண்டது. 320 X 240 பிக்ஸல் வசதியும் கொடுக்கிறது. இது 90 கிராம் எடை கொண்டது.

இந்த சாம்சங் மெகாகேம் சேம்ப் மொபைலுக்கு, சாம்சங் ஜிடி-சி3303ஐ என்ற பெயரும் உள்ளது. இந்த மொபைல் 1.3 மெகா பிக்ஸல் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற போனில் உள்ள 1.3 எம்பி கேமராவை விடவும் துல்லியம் கொண்டுது.

நைட் மோட், மல்டி ஷார்ட் சப்போர்ட், மொசைக் ஷாட், டைமர் ஷாட், ஃபிரேம் ஷாட் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் டச்விஸ் லைட் 2.0 யூஐ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது சோஷியல் நெட்வொர்கிங் அப்ளிக்கேஷன் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.

இதன்மூலம் பேஸ்புக், டிவிட்டர், மைபேஸ் போன்ற வசதியையும் பெற முடியும். இந்த ஜிஎஸ்எம் ஹேண்ட்செட் ஜிபிஆர்எஸ் மற்றும் டபிள்யூஏபி பிரவுசர் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் 30 எம்பி இன்டர்னல் மெமரி, மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு கொண்டது.

இந்த மெமரி வசதியினை அதிகபட்சம் 8ஜிபி வரை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். சாம்சங் மெகாகேம் சேம்ப் மொபைலில் 3டி சவுன்டு தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது சிறந்த ஆடியோ மற்றும் லவுட்ஸ்பீக்கர் வசதியையும் கொடுக்கிறது. மொபைல் டிராக்கர், வைபை, எப்எம் ரேடியோ போன்ற அனைத்து வசதிகளும் இதில் பெற முடியும்.

மேலும் இதில் 1000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 12 மணி நேரம் டாக் டைம் மற்றும் 666 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது. இதனால் பேச்சு எங்கும் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதன் வசதிகளைப் போல் இதன் விலையும் நிச்சயம் ஆச்சர்யப்பட வைக்கும்தான். ஏனென்றால் இத்தனை வசதி கொண்ட சாம்சங் சேம்ப் மெகாகேம் மொபைல் ரூ.3,400 விலையில் மிகவும் எளிதாகக் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X