Home
Mobile

வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ52 சாதனத்தின் புதிய மாடல்- இடைநிலை பட்ஜெட் விலை?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போனுக்கு என தனி வரவேற்பு உண்டு. கேலக்ஸி தொடரில் அடுத்தடுத்து சீரிஸ்களில் சாதனங்கள் வெளியிடப்படுகிறது. அதன்படி கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ52 5ஜி ஆகிய சாதனங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களானது இடைநிலை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் நிறுவனம் ஏ52 5ஜி பிரிவில் மேம்படுத்தப்பட்ட பதிப்பை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அது சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி என அழைபக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ52 சாதனத்தின் புதிய மாடல்- பட்ஜெட் விலை?

2019 இல் கேலக்ஸி ஏ50 அறிமுகம் செய்த சில மாதங்களுக்கு பிறகு கேலக்ஸி ஏ50 எஸ் கிடைக்கத் தொடங்கியது. சாம்சங் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் மலிவு விலை சாதனமாக சில ஏ மற்றும் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் எஸ் தொடர் வரிசைகளை வெளியிட்டது. இருப்பினும் சாம்சங் கேலக்ஸி ஏ51 எஸ் வெளிவரவில்லை என கூறப்பட்டாலும் சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதற்கேற்ப இந்தியாவில் மாதிரி எண் SM-A528B கொண்ட சாதனம் சான்றிதழை பெற்றுள்ளது. இது கொரிய சந்தைக்காக உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த புதிய மாடல் சாதனத்தில் என்ன மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் இருக்கும் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

கேலக்ஸி ஏ50 எஸ் சிறந்த கேமராக்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இதில் 3 எக்ஸ் ஜூம் கேமரா அம்சத்தை கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ52 5ஜி ஆகயவற்றில் காணப்படலாம் இது டீப் சென்சாரை மாற்றக்கூடிய அம்சமாக இருக்கிறது. மேலும் இது கேலக்ஸி ஏ72 சாதனத்திற்கு ஒத்த கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

அப்படி இருக்கும்பட்சத்தில் கேலக்ஸி ஏ72 சாதனத்துக்கு ஒத்த கேமரா அமைப்பை கேலக்ஸி ஏ52 4ஜி மாறுபாடு கொண்டிருக்கிறது. கேலக்ஸி ஏ52 5ஜி கொரியாவில் விற்கப்படும் ஒரு மாடலாக இருக்கலாம். எல்டிஇ அல்லது கேலக்ஸி ஏ52 5ஜி மாறுபாடு குறித்த கூடுதல் தகவல் தற்போதுவரை கிடைக்கவில்லை.

தற்போதுவரை இது உறுதியான தகவல் இல்லை. புதிய கேலக்ஸி ஏ52 மாடல் குறித்து கூடுதல் தகவல்களை எதிர்வரும் நாட்களில் ஆன்லைன் வெளியீடு மூலம் அறிந்துக் கொள்ளலாம். சாம்சங் பயனர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய இந்த ஸ்மார்ட்போன் அவ்வப்போது தகவல்களை தொடர்ந்து வெளியிடுவோம்.

Best Mobiles in India

English summary
Samsung May Works on New Galaxy A52s 5G: Upgraded Version of Galaxy A52 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X