மடிக்கும் திறன் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வெளியீடு.!!

Written By:

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட்போன் சந்தையை அதிர வைக்கும் புதிய கருவியை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மடித்து வைத்தால் 5 இன்ச் ஸ்மார்ட்போன், மடிப்பை திறந்தால் 7 இன்ச் டேப்ளெட் என இரு வித பயன்பாடுகளை இந்த கருவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முன்மாதிரி

முன்மாதிரி

மடிக்கும் திரை கொண்ட முன்மாதிரியை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தாண்டின் பிற்பாதியில் தயாரிப்பு பணிகளை துவங்க இருப்பதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன் கருவியை தயாரிக்க அந்நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முதலீடு செய்திருக்கின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருப்பதால் இந்த கருவியை இரு பாதியாக மடிக்க முடியும். இதனை ஒருவர் பர்ஸில் வைத்து எடுத்து செல்லலாம்.

வளர்ச்சி

வளர்ச்சி

"எங்களது திட்டத்தின் படி மடிக்கும் திறன் கொண்ட ஓஎல்இடி வகைகளின் முன்னேற்றம் நடைபெற்று வருகின்றது. இதன் தயாரிப்பு பணிகள் மற்றும் வெளியீடு போன்ற தகவல்கள் திட்டமிடப்பட்டு வருகின்றது" என சாம்சங் டிஸ்ப்ளே பிரிவு தலைவர் லீ சங்-ஹூன் தெரிவித்துள்ளார்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

தற்சமயம் வரை இந்த கருவியில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung may unveil 5-inch foldable smartphone next year in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot