பிப்ரவரி 26-ல் புதிய அவதாரம் எடுக்கும் சாம்சங், தயாராக இருங்கள்.!
மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 கருவியை ஓரங்கட்டும் அளவிற்கு நமக்கு புதிய தகவலொன்று கிடைத்துள்ளது.
முன்னதாக நிகழப்போகும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் சாம்சங் அறிமுக திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றி எங்களுக்கு கிடைத்த அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்கினோம். இப்போது எம்டபுள்யூசி 2017 நிகழ்வு நெருங்கிக்கொண்டே போக தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் "புதிய அவதாரம்" ஒன்றை எடுக்கப்போவதாக தெரிய வந்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 கருவியை ஓரங்கட்டும் அளவிற்கு நமக்கு புதிய தகவலொன்று கிடைத்துள்ளது. அதாவது, சாம்சங் நிறுவனம் அதன் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனை அதாவது மடங்கக்கூடிய கருவியை காட்சிப்படுத்தலாம்.

மடங்கக்கூடிய கருவி
கேலக்ஸி எஸ்8 கருவிதான் இந்த 2017-ஆம் ஆண்டின் மிகப்பெரிய அதிரகியாக அமையும் என்று அனைவரும் எதிர்நோக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சாம்சங் அதன் பல ஆண்டு கால எதிர்பார்ப்பான மடங்கக்கூடிய கருவியை பிப்ரவரி 26 அன்று காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

விற்பனை
மற்றும் வதந்திகளின்படி சாம்சங் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று அறியப்படுகிறது

கேலக்ஸி டேப் எஸ்3
இந்த திட்டங்களுடன் இணைந்து, தென் கொரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளர் ஆன சாம்சங் அதன் கேலக்ஸி டேப் எஸ்3 சாதனத்தையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கருவி சார்ந்த தகவல்களும் இணையத்தில் யூகங்களாய் சுற்றிக்கொண்டு தான் உள்ளன.

டிஸ்ப்ளே
அந்த வதந்திகள் உண்மையாகும் பட்சத்தில் எதிர்பார்க்கப்படும் சாம்சங் டேப்ளெட் ஆனது ஒரு 9.6 அங்குல 2048 x 1536 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 செயலி மற்றும் 4ஜிபி ரேம் கொண்டிருக்கும்.

"கதவுகளுக்கு பின்னால்"
போல்டபிள் சாம்சங் கருவிகள் சார்ந்த விடயத்தை பொறுத்தமட்டில் இந்த டிசைன் "கதவுகளுக்கு பின்னால்" நடக்கும் ஒரு முயற்சியாகும் மற்றும் தற்போதைக்கு இக்கருவி ஒரு கருத்து அமர்வு போல தான் இருக்கும்.

அதிகாரப்பூர்வமாக
எனினும், இந்த மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு நல்ல கருத்தை வரவேற்பை பெறுகிறது என்றால் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்த போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிவிக்கக்கூடும். இதெல்லாம் ஒருபக்கமிருக்க இந்த லீக்ஸ் விவரங்களில் இருந்து உப்பின் ஒரு சிட்டிகை அளவு மட்டுமே நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
2017-ல் வாங்கக்கூடிய விருப்பத்திற்குரிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.!


Click it and Unblock the Notifications