3 ஜிபி ரேம் அம்சத்துடன் வருகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ12: இதோ வெளியான தகவல்!
சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஏ12 என்று அழைக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் சிப்செட், ரேம் மற்றும் சில அம்சங்கள் குறித்து தகவல் கீக்பெஞ்சில் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12
இதுகுறித்து கீக்பெஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ12 மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 3ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும்
ஸ்மார்ட்போன் சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் மாறுபாடாக சாம்சங் கேலக்ஸி ஏ12 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ11 போன்ற ஒத்த அம்சங்கள்
இதுகுறித்து வெளியான முந்தைய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ12., SM-A125F என்ற எண்ணைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ11 போன்ற ஒத்த அம்சங்களை சாம்சங் கேலக்ஸி ஏ12 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ12 கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கும்.

எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ12 அதே எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை வசதி இருக்கும். இருப்பினும் சாம்சங் கேலக்ஸி ஏ 11 மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரியைவிட அதிக சக்தி பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ11 அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ11 அம்சங்கள் குறித்து பார்க்கையில், 6.4 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே, 720 x 1,560 பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இது 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் பஞ்ச்ஹோல் டிஸ்ப்ளேவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications