Galaxy S25 Slim வரும்.. ஆனா வராது.. ஆசை காட்டி மோசம் செஞ்ச Samsung கம்பெனி.. ஜன.22 க்கு முன்பே அப்செட்!
2025 ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் அறிமுகமாகி, விற்பனைக்கும் வந்துவிட்ட நிலையில்.. அடுத்தது அனைவருடைய குறியும் ஜனவரி 22 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் மீதுதான் உள்ளது.
கேலக்ஸி எஸ்25 சீரீஸின்கீழ் நிச்சயமாக 3 மாடல்கள் தான் அறிமுகமாகுமா என்கிற கேள்விக்கு யாருமே உறுதியான பதிலை தர தயாராக இல்லை. ஏனென்றால், இந்தாண்டு கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Galaxy S25 Plus), கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) உடன் சேர்த்து கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Galaxy S25 Slim) என்கிற புதிய மாடலும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில தகவல்கள் இது ஜனவரி 22 அன்று வெளியிடப்போவதில்லை; மாறாக 2025 மே மாத வாக்கில் அறிமுகமாகும் என்கிறன. போதாக்குறைக்கு கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஆனது அதன் அல்ட்ரா-ஸ்லிம் டிசைனின் காரணமாக மிகவும் சிறிய அளவிலான பேட்டரி கெப்பாசிட்டியைத்தான் பேக் செய்யும் என்கிற தகவல் வெளியாகி, இந்த ஸ்மார்ட்போனிற்காக காத்திருந்த பலரையும் ஆஃப் செய்த்து. அதற்குள் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் தொடர்பான இன்னொரு 'பேட் நியூஸ்' வெளியாகி உள்ளது.
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஈவான் பிளாஸ் (Evan Blass) வழியாக கிடைத்த தகவலின்படி, கேலக்ஸி எஸ் 25 ஸ்லிம் மாடல் ஆனது இந்தியாவிற்கு, அவ்வளவு ஏன் அமெரிக்காவிற்கு கூட வராமல் போகலாம். மாறாக இது தென் கொரியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம்.
அதாவது தென் கொரியாவில் மட்டுமே வாங்க கிடைக்கும் - ஸ்லிம் ஆன, லைட் ஆன போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி இஸட் போல்ட் ஸ்பெஷல் எடிஷனை (Galaxy Z Fold Special Edition) போலவே கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஆனது ஒரு எக்ஸ்க்ளூஸிவ் ஆன ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.
அதுமட்டுமல்ல இது கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் என்கிற பெயரை கூற பெறாமல் போகலாம். மேலும் இதன் விலை நிர்ணயம் ஆனது கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களுக்கு இடையே இருக்கும் என்றும் ஈவான் பிளாஸ் கூறியுள்ளார். முன்னதாக இது கேலக்ஸி எஸ்25 சீரிஸின் மிகவும் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக யாரெல்லாம் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மாடலுக்காக காத்திருக்கிறீர்களோ அவர்களெல்லாம் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ளவும். ஒருவேளை இது எப்படியோ இங்கே அறிமுகம் ஆனாலும் கூட இதன் பேட்டரி அளவு உங்களை நிச்சயம் பின்வாங்க வைக்கும். டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக சமீபத்திய கிடைத்த தகவலின்படி கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 3000mAh முதல் 4,000mAh க்குள் தான் இருக்குமாம்.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போனின் அல்ட்ரா-ஸ்லிம் டிசைன் தான், இதற்கு பின்னால் இருக்கும் காரணமாக இருக்கும். டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் படி ,கேலக்ஸி எஸ் 25 ஸ்லிம் ஸ்மார்ட்போன் ஆனது கேமரா மாட்யூலை சேர்க்காமல் வெறும் 6.4 மிமீ தடிமன் மட்டுமே இருக்கும் என்றும், கேமரா மாட்யூலுடன் சேர்த்து 8.3 மிமீ தடிமன் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது
பேட்டரியில் சமரசங்கள் இருந்தாலும்கூட கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் குறைகள் இருக்காது என்பது போல் தெரிகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.7-இன்ச் முதல் 6.8-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை, சில லீக்ஸ் இது ரூ.99,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றன. சில லீக்ஸ் இது ரூ.70,000-ஐ சுற்றிய விலைக்கு வரும் என்கின்றன.


Click it and Unblock the Notifications








