Subscribe to Gizbot

ஐபோன் எக்ஸ்-ஐ தூக்கி போடுங்க, மெர்சலாக்கும் வடிவமைப்பில் கேலக்ஸி .!

Written By:

சர்வதேச நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியாக சிஇஎஸ் (CES) நிகழ்வில் சாம்சங் ஒரு குறிப்பிடத்தக்க மடிக்கக்கூடிய 'கேலக்ஸி எக்ஸ்' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கசிந்துள்ள ஒரு புகைப்படமானது சாம்சங் நிறுவனம் அதன் கவர்ச்சிகரவடிவமைப்பிலான கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனையும் காட்சிப்படுத்தும் என்கிறது.

ஐபோன் எக்ஸ்-ஐ தூக்கி போடுங்க, மெர்சலாக்கும் வடிவமைப்பில் கேலக்ஸி .!

வெளியான கசிவுகளில் இருந்து, சாம்சங் நிறுவனம் அதன் அடுத்தகட்ட கேலக்ஸி கருவி சார்ந்த பணிகளில் மிகவும் தீவிரமான முறையில் பணியாற்றுவது வெளிப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

"முழுமையான" பெஸல்லெஸ்

பிரபல டச்சு தொழில்நுட்ப தளமான லெட்ஸ்கோடிஜிட்டல் (LetsGoDigital) மூலம், ஒரு புதிய சாம்சங் விபோ (WIPO - உலகளாவிய சர்வதேச சொத்து அலுவலகம்) காப்புரிமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியான தகவல் நிறுவனத்தின் முழுமையான பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை விவரிக்கின்றன.

"முற்றிலும்" பூஜ்யம் பெஸல்

இதில் என்ன சுவாரசியம் என்றால் இன்றைய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மூலம் கையாளப்படும் அர்த்தமற்ற (எதாவது ஒன்று செய்வது வடிவமைப்பை மாற்ற வேண்டுமென்ற கட்டாயத்தின் கீழ் கையாளப்படும்) பெஸல்லெஸ் வடிவமைப்பை போலின்றி இது "முற்றிலும்" பூஜ்யம் பெஸல்களை கொண்டுள்ளது.

சுமார் 180 டிகிரி வளைவு

சுமார் 180 டிகிரி வளைவு

இந்த வடிவமைப்பை சாம்சங் நிறுவனம், அதன் காப்புரிமையான டபுள்யூஓ / 2017/204483 கொண்டு எவ்வாறு அடைகிறது என்பதை கசிந்த புகைப்படம் காட்சிப்படுத்துகிறது. புகைப்படத்தின்படி சென்றால், பிரதான டிஸ்பிளேவின் மேல், கீழ் மற்றும் பக்கங்களானது சுமார் 180 டிகிரி வளைவு கொண்டிருக்கின்றன.

சாம்சங் மேலும் அதன் 'எட்ஜ் டிஸ்ப்ளேக்களை' நீட்டிப்பதின் காரணம் என்ன.?

சாம்சங் மேலும் அதன் 'எட்ஜ் டிஸ்ப்ளேக்களை' நீட்டிப்பதின் காரணம் என்ன.?

முதலில், இந்த வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இரண்டாவதாக இது போன்ற வடிவமைப்பில் பக்கங்களில் அல்லது மேலே காட்சிப்படும் நோட்டிபிகேஷன்களின் இன்னும் எளிமையானதாக கையாளப்படலாம். மூன்றாவதாக, இம்மாதிரியான வடிவமைப்பு பிஸிக்கல் பவரை ரீபிளேஸ்மென்ட் செய்ய உதவும் மற்றும் விர்ச்சுவல் பொத்தான்கள் இருக்கும் அது பழுது சிக்கல்களை குறைப்பதோடு நீர் எதிர்ப்பு ஆதரவையும் அதிகரிக்கும்.

போல்டபிள் டிஸ்பிளே

போல்டபிள் டிஸ்பிளே

மறுகையில் உள்ள போல்டபிள் டிஸ்பிளே தொழில்நுட்பமானது, இனியுமொரு அறிவியல் புனைகதை அம்சமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஆப்பிள் நிறுவனமும் போல்டபிள் ஸ்மார்ட்போன் பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், சாம்சங் நிறுவனம் மிக விரைவாக பணியாற்றும் என்பதும் உறுதி. ஆக மிக விரைவில் சாம்சங் நிறுவனத்தின் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை நம் கைகளில் தவழலாம்.

முன்பக்க கேமராக்கள் எங்கு பொதிக்கப்படும்.?

முன்பக்க கேமராக்கள் எங்கு பொதிக்கப்படும்.?

இதுபோன்ற தீவிரமான வடிவமைப்புகளை கையாளும் போது, நிச்சயமாக பல கேள்விகள் மேலோங்கும். குறிப்பாக முன்பக்க கேமராக்கள் எங்கு பொதிக்கப்படும்.? (ஒருவேளை மறைமுகமாக டிஸ்பிளே கண்ணாடியின் கீழ் பொருத்தப்படலாம்) மற்றும் சாம்சங் அதன் டிஸ்பிளேவில் கைரேகை சென்சாரை எங்கே பொருத்தும்.? போன்ற கேள்விகளுக்கு சாம்சங் நிறுவனம் தன பதில்கூற வேண்டும்.

மிகப்பெரிய கேள்வி.?

மிகப்பெரிய கேள்வி.?

இத்தகைய தொழில்நுட்பத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா.? உடனே இதையெல்லாம் மாற்றியமைக்க முடியுமா.? என்பது தான் எல்லாவற்றை விடவும் மிகப்பெரிய கேள்வி. அதுவொருபக்கம் இருக்க மறுகையில் இதுதான் மாற்றங்களுக்கான சரியான நேரம் என்பதும் நிதர்சனமே.

கேலக்ஸி எக்ஸ்

கேலக்ஸி எக்ஸ்

2018 சாம்சங் நிறுவனத்தின் மூன்று புதிய கேலக்ஸி எஸ்9 மாதிரிகள் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்றாவது மாறுபாடான கேலக்ஸி எக்ஸ் ஆனது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ஒரு மலிவான கேலக்ஸி ஸ்மார்ட்போனாக வெளியாகுமென நம்பப்படுகிறது. புதுமைகளுக்கு பெயர்போன சாம்சங் நிறுவனம், வருகிற 2018-ஆம் ஆண்டில் என்னென்ன செய்யப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung Leak Reveals Radical New Galaxy Smartphone. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot