Home
Mobile

அதிரடியாக மூன்று 3ஜி மொபைல்களை களமிறக்கும் சாம்சங்

By Super
அதிரடியாக மூன்று 3ஜி மொபைல்களை களமிறக்கும் சாம்சங்
3ஜி மொபைல் என்றாலே விலை அதிமாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. ஆனால் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மூன்று போன்கள் அப்படியல்ல. இது மிகவும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் உள்ளது. சாம்சங் சேம்ப், சாம்சங் சாட் 3.5 ஜி, பிரைமோ என்று அந்த மூன்று மொபைல்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே 3ஜி மொபைல்கள் வேகமான பிரவுசிங் வசதி கொண்டுள்ளதாக இருக்கும். 3-ஜி மார்கெட்டில் சாம்சங் தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சாம்சங் சேம்ப் 3.5 ஜி 7.1 டச் ஸ்கிரீன் வசதியைக் கொண்டுள்ளது. 2 எம்பி கேமரா வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.

30 எம்பி மெமரி ஸ்டோரேஜ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். சாம்சங் சாட் மொபைல் ஆப்டிக்கல் டிராக் மற்றும் 6.1 செ.மீ. திரை வசதி கொண்டுள்ளது. டைப் செய்வதற்கு சிரமமில்லாமல் இருப்பதற்காக இதில் கிவெர்டிக் கீப்பேட் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பிரைமோ 6.1 செ.மீ. திரை வசதிகொண்டுள்ளது. இதில் 5 எம்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் செகன்டரிக் கேமராவின் மூலம் வீடியோ காலிங் வசதியையும் பெற முடியும். இன்று விற்பனை சந்தையில் நிறைய 3 ஜி மொபைலை பார்க்க முடியும். அதில் பொதுவாக செகன்டரிக் கேமாரா இருப்பதில்லை. ஆனால் சாம்சங் உருவாக்கியுள்ள இந்த மொபைல்களில் செகன்டரி கேமராவும் உள்ளது.

இந்த மூன்று மாடல்களுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க குறைந்த விலையில் வந்துள்ளது. சாம்சங் சேம்ப் 3.5 ஜி ரூ.5,590 விலையிலும், சாம்சங் சாட்- 527 ரூ.5,930 விலையிலும் மற்றும் பிரைமோ ஹேண்செட் ரூ.6,590 விலையிலும் கிடைக்கிறது. குறைந்த விலையில், உயர்ந்த தொழில் நுட்பத்துடன் இந்த மூன்று மொபைல்களையும் சாம்சங் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X