கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் (சன்ரைஸ் கோல்ட் எடிஷன்) இந்திய விலை வெளியானது.!

இந்தியாவில் அதன் டிவி சிரியஸை அப்டேட் செய்த கையோடு, சாம்சங் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எஸ்9 + இன் புதிய வண்ண மாறுபாட்டை அறிவித்துள்ளது.

|

இந்தியாவில் அதன் டிவி சிரியஸை அப்டேட் செய்த கையோடு, சாம்சங் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எஸ்9 + இன் புதிய வண்ண மாறுபாட்டை அறிவித்துள்ளது. சன்ரைஸ் கோல்ட் எடிஷன் என்கிற பெயரின் கீழ் இந்தியாவில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் 128 ஜிபி உள் சேமிப்பு மாடலின் விலை ரூ.68,900/- ஆகும்.

கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் (சன்ரைஸ் கோல்ட் எடிஷன்) இந்திய விலை வெளியானது.!

சாம்சங் ஏற்கனவே கேலக்ஸி எஸ்9+ இன் மூன்று வண்ண மாறுபாடுகளை விற்பனை செய்கிறது : மிட்நைட் பிளாக், கோரல் ப்ளூ மற்றும் லிலாக் பர்பில். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கேலக்ஸி S9 + அறிமுகப்படுத்தியதில் இருந்து சாம்சங் அறிமுகப்படுத்திய முதல் வண்ண மாறுபாடு இதுவாகும். சாம்சங் இந்தியாவின் இந்த புதிய வண்ண மாறுபாடு ஆனது ஜூன் 20, 2018 ஆம் முதல் சில கூடுதல் கேஷ்பேக் சலுகைகளுடன் சில்லறை விற்பனை கடைகளில் வாங்க கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் இந்த புதிய வண்ண மாறுபாட்டை ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஷாப் ஆகியவற்றிலும் கூட விற்பனை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த சாம்சங் புதிய மாறுபாட்டை வாங்குபவர்களுக்கு இலவசமாக ஒரு முறை திரை மாற்றம், ஐசிஐஐஐ வங்கி கிரெடிட் கார்டுகள் அல்லது பேடிஎம்-ஐப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.9,000/- விலைகுறைப்பு ஆகியவைகளும் கிடைக்கும்.

மற்றபடி புதிய கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் எதிலும் எந்த மாற்றமும் இல்லை. வண்ண மாறுபாடு மட்டும் தான் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரே மாற்றம். துரதிருஷ்டவசமாக, சாம்சங் கேலக்ஸி எஸ்9-ன் சன்ரைஸ் கோல்ட் வண்ண விருப்பத்தை சாம்சங் தொடங்கவில்லை. ஏனெனில் தென் கொரிய நிறுவன,மான சாம்சங், அதன் சிறந்த விற்பனையான ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ்9+ ஐ தான் கருதுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Launches the Sunrise Gold Edition of Galaxy S9+ in India at Rs 68,900. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X