இப்போ சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் 6ஜிபி ரேம்,128ஜிபி சேமிப்பு அம்சத்தோடு: விலை இவ்வளவுதானா?

|

வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் 5000 எம்ஏஹெச் பேட்டரியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐசிஐசிஐ வங்கி கிரெட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கும் போது ரூ.750 கேஷ்பேக் வசதி பெறுகிறார்கள்.

விலைக் குறைப்பு

விலைக் குறைப்பு

சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் ஸ்மார்ட்போனின், 4 ஜிபி ரேம் விலை ரூ .15,999 என்று இருந்தது, இப்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டு சாம்சங் கேலக்ஸி A21s தற்பொழுது வெறும் ரூ .14,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரூ.1,000 விலை குறைப்பு

ரூ.1,000 விலை குறைப்பு

அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ .17,499 ஆக இருந்தது. தற்பொழுது புதிய விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்த வேரியண்டின் விலை வெறும் ரூ.16,499 ஆகக் குறைக்கப்பட்டது. அதாவது இந்த புதிய விலை குறைப்பின் கீழ் இரண்டு வேரியண்ட் மாடல்களுக்கும் ரூ.1,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை!உங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை!

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம்

3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம்

இந்த ஸ்மார்டபோனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Launches Samsung Galaxy A21s New Variant at 6GB RAM, 128 GB Storage

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X