இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 & எஸ்9 ப்ளஸ் விற்பனை: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

தென் கொரிய (ஸ்மார்ட்போன்) தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், 2018-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்திய

|

தென் கொரிய (ஸ்மார்ட்போன்) தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், 2018-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் பார்சிலோனாவில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2018 (எம்டபுள்யூசி 2018) நிகழ்வில் அறிமுகமான இக்கருவிகளின் உலகளாவிய விற்பனை தொடங்கியுள்ளது. இதன் இந்திய விற்பனையானது நேற்று (செவ்வாயன்று) புது டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட்டது.

64 ஜிபி மாதிரி

64 ஜிபி மாதிரி

நிறுவனத்தின் பிளாக்ஷிப் தொலைபேசிகளான இக்கருவிகள் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்டில் (சேமிப்பு மாதிரிகளில்) வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாதிரிகளானது முறையே ரூ.57,900/-க்கும் மற்றும் ரூ.64,900/-க்கும் இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.

256 ஜிபி மாதிரி

256 ஜிபி மாதிரி

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மாதிரிகளானது முறையே ரூ.65,900/-க்கும் மற்றும் ரூ.72,900/-க்கும் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பதிவு, ஆப்லைன்

முன்பதிவு, ஆப்லைன்

சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ஷாப்.சாம்சங்.காம் (shop.samsung.com) வழியாக ரூ.2,000/- முன்பணமாம் செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான முன்பதிவுகளை செய்ய முடியும். தவிர நாடெங்கிலும் உள்ள ஆப்லைன் கடைகளிலும் வாங்க முடியும்.

கேலக்ஸி எஸ்9 அம்சங்கள்

கேலக்ஸி எஸ்9 அம்சங்கள்

வெளியான இரு கருவிகளில் சிறிய மாடலான இது, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் 10 என்எம், 64 பிட், ஆக்டா எக்சிநோஸ் 9810 செயலி ஆகியவற்றுடன் இயங்கும்.

400ஜிபி வரை

400ஜிபி வரை

4 ஜிபி ரேம் கொண்டுள்ள இக்கருவி, இரண்டு சேமிப்பு வகைகளில் - 64 ஜிபி மற்றும் 256 ஜிபி - வெளியாகியுள்ளன. உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 400ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் கொண்டுள்ளது.

சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே

சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே

உடல் வடிவமைப்பை பொறுத்தமட்டில், இந்த தொலைபேசி அதன் முன்னோடியான கேலக்ஸி எஸ்8 போன்றே உள்ளது. ஒரு 5.8-அங்குல திரை, மெல்லிய பெஸல்கள், க்வாட் எச்டி+, வளைந்த கண்ணாடி, சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே ஆகியவைகளை கொண்டுள்ளது.

திரை விகிதம்

திரை விகிதம்

இந்த தொலைபேசி ஒரு அலுமினிய சட்டம் கொண்டுள்ளது மற்றும் கண்ணாடியிலான முன் மற்றும் பின்புறம் கொண்டுள்ளது. எஸ்9 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அளவீடானது 1440X 2960 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18.5: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த புதிய சாம்சங் தலைமை சாதகமானது எப்/ 1.5-எப் / 2.4 என்கிற மாறுபட்ட துளை கொண்ட 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. இது 2160பி வீடியோவை 60 எப்பிஎஸ் (ஒரு நொடிக்கான பிரேம்கள்) வேகத்திலும் மற்றும் 240 எப்பிஸ் வேகத்தில் 1080பி வீடியோவையும் கைப்பற்ற உதவும்

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

மேலும் இக்கருவி கேமரா ஆப்டிகல் பட நிலைப்படுத்தல் (ஓஐஎஸ்) திறனை கொண்டுள்ளது மற்றும் ஒரே நேரத்தில் 4கே வீடியோ பதிவு செய்யும் போதே ஒரு 9 மெகாபிக்சல் படத்தை கிளிக் செய்யவும் உதவும். முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எப் / 1.7 துளை உடனான ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9+ அம்சங்கள்

கேலக்ஸி எஸ்9+ அம்சங்கள்

பெரிய மாதிரியான எஸ்9 ப்ளஸ் ஆனது எஸ்9 உடன் ஒப்பிடும்போது நிறையவே வேறுபடுகிறது. இக்கருவி ஒரு 6.2 அங்குல திரை, மெல்லிய பெஸல்கள், வாட் எச்டி+, வளைந்த கண்ணாடி, சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 1440X 2960 பிக்சல்கள் மற்றும் ஒரு 18.5: 9 விகிதம் ஆகியவைகளை கொண்டுள்ளது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

எஸ்9 போன்ற கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆனதும், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் 10 என்எம், 64 பிட், ஆக்டா எக்சிநோஸ் 9810 செயலி ஆகியவற்றுடன் இயங்குகிறது. ஆனால் 6ஜிபி ரேம் உடனான 64ஜிபி மற்றும் 256ஜிபி ஆகிய சேமிப்பு மாதிரிகளில் வருகிறது. உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 400ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

பின்புற கேமரா அமைப்பானது எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகியவற்றுக்கு இடையேயான மிகப்பெரிய ஒரு வேறுபாடாகும். அதாவது ஒரு 12 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா கொண்டுள்ளது. முதன்மை கேமராவானத்து எப் / 1.5-எப் / 2.4 துளை கொண்டிருக்க மற்றும் இரண்டாம் நிலை கேமராவானது எப் / 2.4 துளை கொண்டுள்ளது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

எஸ்9+ ஸ்மார்ட்போனின் டூயல் சென்சார் ஆனது 2160பி தரத்திலான 60 எப்பிஎஸ் வீடியோ மற்றும் 1080பி தரத்திலான 240 எப்பிஎஸ் வீடியோக்களை பதிவு செய்ய உதவுகிறது மற்றும் ஒரே நேரத்தில் 4கே வீடியோ பதிவு செய்யும் போதே ஒரு 9 மெகாபிக்சல் படத்தை கிளிக் செய்யவும் உதவும். முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எப் / 1.7 துளை உடனான ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பொதுவான அம்சங்கள்

பொதுவான அம்சங்கள்

இரு தொலைபேசிகளிலும் ஒரு ஐரிஸ் ஸ்கேனர், பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் முகம் கண்டறிதல் போன்ற ஒருமித்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இரண்டு சாதனங்களுமே டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, டைப் சி யூஎஸ்பி. பராக்ஸிமிட்டி, எஸ்பிஓ2 (SpO2), சாம்சங் டெக்ஸ் ஆதரவு, பிக்ஸ்பை இயற்கை மொழி கட்டளைகள் மற்றும் டிக்டேஷன், பாஸ்ட் சார்ஜ் 2.0 மற்றும் ஏஆர் ஈமோஜி ஆகியவகளை ஆதரிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

பேட்டரியை பொறுத்தமட்டில் வேறுபாடுகள் கொண்டுள்ளன. எஸ்+ ஆனது ஒரு 3,500 எம்எச் நீக்கமுடியாத பேட்டரி கொண்டு இயங்கும் மறுகையில், ​​எஸ்9 ஆனது ஒப்பீட்டளவில் எளிமையான 3,000 எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி கொண்டு இயங்குகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
வண்ண மாறுபாடுகள்

வண்ண மாறுபாடுகள்

இரு கருவிகளும் மிட்நைட் பிளாக், பவள நீலம், டைட்டானியம் சாம்பல் மற்றும் இளஞ்சிவப்பு ஊதா ஆகிய நிறங்களில் இந்திய சந்தையை எட்டியுள்ளன. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய உடனடி அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Samsung launches S9, S9+ in India: Price, specifications and all you need to know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X