விற்பனையில் அசத்திய சாம்சங் கேலக்ஸி ஜே தொடரில் இரண்டு புதிய மாதிரிகள்.!

|

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், இந்தியாவில் புதிய அதன் கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் ஆகிய இரண்டு கருவிகளின் புதிய சேமிப்பு மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்கருவிகள் அசல் கருவிகளான ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் கடந்த அக்டோபர் 2016-இல் வெளியிடப்பட்டது மற்றும் நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனை ஜே தொடர் மாதிரிகளில் ஒன்றாக திகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கருவிகள் வேகத்தை தொடரும் ஒரு முயற்சியாக சாம்சங் நிறுவனம் புதிய விலை நிர்ணயத்தில் புதிய சேமிப்பு மாதிரிகளை வெளியிட்டுள்ளது. அவைகளை பற்றிய விரிவான தொகுப்பே இது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இரண்டு கருவிகளில், கேலக்ஸி ஜே7 ப்ரைம் தான் ஒரு உயர் இறுதியில் மாதிரியாக திகழ்கிறது. இது ஹோம் பொத்தானில் கைரேகை சென்சார் கொண்டு ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1920x1080p) சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

ரியர் கேமரா

ரியர் கேமரா

மேலும் 3ஜிபி ரேம் உடனான 16ஜிபி உள் சேமிப்பு மற்றும் ஒரு 3,300 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த தொலைபேசி எஃப் / 1.9, எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி ரியர் கேமரா மற்றும் எப்/1.9 துல்லியத்துடனான 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

கேலக்ஸி ஜே5 ப்ரைம்

கேலக்ஸி ஜே5 ப்ரைம்

மறுகையில் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஆனது ஒரு சிறிய 5.0 அங்குல எச்டி திரை மற்றும் க்வாட் கோர் சிபியூ, 2 ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 13எம்பி முதன்மை கேமரா, 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 2,400எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகிய நன்மைகளை கொண்டுள்ளது.

சாம்சங் மொபைல் இந்தியா

சாம்சங் மொபைல் இந்தியா

பெரிய அளவிலான சேமிப்புத்திறன் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஜே 7 ப்ரைம், ஜே5 ப்ரைம் இந்தியாவில் வெளியாகும் என்ற சாம்சங் மொபைல் இந்தியா ட்விட்டரில் அறிவித்த பின்னர் இக்கருவிகள் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள புதிய மாறுபாடுகள் வ விவரம்

வெளியாகியுள்ள புதிய மாறுபாடுகள் வ விவரம்

ஜே7 ப்ரைம் : 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
ஜே5 ப்ரைம் : 2ஜிபி ரேம், 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

கருப்பு மற்றும் தங்கம் ஆகிய இரண்டு வண்ணம் மாறுபாடுகளில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் கருவியானது ரூ.16,900/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. அதே வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் சாம்சங் ஜே5 ப்ரைம் ஆனது ரூ.14,900/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung launches new line of Galaxy J7 Prime, J5 Prime with bigger storage in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X