குறைந்த விலையில் கேலக்ஸி எஸ்-3 32 ஜிபி வெர்ஷன்!

By Super
|
குறைந்த விலையில் கேலக்ஸி எஸ்-3 32 ஜிபி வெர்ஷன்!

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வெர்ஷன் குறைந்த விலையில் ஆன்லைன் ஸ்டோரில் அறிமுகமாவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வெர்ஷனை அறிமுகம் செய்கிறது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் வருவாயை உயர்த்திய பெருமையில் முக்கிய பங்கு வகிக்கிறது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்.

இதன் 16 ஜிபி வெர்ஷனை நமது நாட்டில் அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம். இதை தொடர்ந்து 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வெர்ஷன் அறிமுகமாவதாக சில செய்திகள் வெளியாகி வந்தது.

அந்த வகையில் தனது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம்.

இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்வென்றால் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 32 ஜிபி-யின் விலை, சாம்சங் கேலக்ஸி எஸ்-3 16 ஜிபி வெர்ஷனையும் விட குறைந்ததாக இருக்கும் என்பது தான்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி வெர்ஷனும் நமது நாட்டில் அறிமுகமாவதாக சில செய்திகள் வெளியாகி வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் இந்த 32 ஜிபி வெர்ஷன் ரூ. 41,500 விலை கொண்டதாக இருக்கும்.

சமீபத்தில் தான் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 1 கோடி ஸ்மார்ட்போன் விற்பனையை பெற்றுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. இதில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வெர்ஷன் ரூ. 41,500 விலைக்கு அறிமுகமானது என்றால் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஏக குஷியாகிவிடும்.

இதனால் இந்த 32 ஜிபி வெர்ஷன் கொண்ட கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் இன்னும் அதிக ஆர்வத்தோடு வாங்குவார்கள். இதனால் சாம்சங் நிறுவனத்தின் வருவாய் இன்னும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X