512ஜிபி மெமரி வசதியுடன் களமிறங்கிய அசத்தலான கேலக்ஸி எஸ்10 லைட்.!

|

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்த நிலையில், தற்சமயம் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்
மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 லைட்

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விலைரூ.44,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி எஸ்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Launches Galaxy S10 Lite With Up To 512GB Storage : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X