இந்திய சந்தையில் சாம்சங்கின் மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த போன்களுக்கு கேலக்ஸி எஸ் டூவோஸ் மற்றும் கேலக்ஸி ஒய் டூவோஸ் லைட் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
இந்த இரண்டு போன்களும் ஸ்மார்ட் டூவல் சிம் வசதிகளுடன் வருகின்றன. அதன் மூலம் இந்த போன்களில் வரும் அழைப்புகளை தவறவிடாமல் எடுக்க முடியும்.
கேலக்ஸி எஸ் டூவோஸ் ஸ்மார்ட்போன் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸ் மற்றும் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம் ஆகிய தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கின்றது. அதோடு இதன் ஸ்டைலான 4 இன்ச் டபுள்யுவிஜிஎ டிஎப்டி டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது.
அதோடு இந்த போனில் சாட்ஆன் மெசஞ்சர், மை மியூசிக், மை மூவிஸ் மற்றும் ஹேன்டி போன்ற அப்ளிகேசன்களும் உள்ளன. இந்த போன் ரூ.17,900க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக கேலக்ஸி ஒய் டூவோஸ் லைட் போன் 832 எம்ஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம் போன்ற வசதிகளைக் கொண்டு வருகிறது. மேலும் வைபை வசதியையும் இந்த போன் வழங்குகிறது.
இதன் 3ஜிபி மெமரியை 32ஜிபி அளவிற்கு விரிவுபடுத்த முடியும். அதோடு சாம்சங் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு கூட்டணி வைத்து இந்த போனோடு 6 மாதத்திற்கான இலவச அன்லிமிட்டட் 2ஜி டேட்டா அல்லது 1ஜிபி 3ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த போன் 6,990க்கு விற்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications