தமிழ் மொழியுடன் கேலக்ஸி நோட் 3 இந்தியாவில் வெளியிடப்பட்டது

|

சாம்சங் நிறுவனம் இன்று செப்டம்பர் 17 ஆம் தேதி கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் வெளியிட உள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். சாம்சங்கின் இந்த புதிய ஜோடிகளுக்கு இந்தியாவில் முன் பதிவு தொடங்கிவிட்டது என்ற தகவலையும் வெளியிட்டிருந்தோம்.

இப்பொழுது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழா இன்று மதியம் 12.15PM முதல் தொடங்கியது. இந்த இரண்டு சாதனங்களும் செப்டம்பர் 25 முதல் மொபைல் ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர உள்ளன.

கேலக்ஸி நோட் 3 பயன்படுத்தும் வோடபோன் 2ஜி வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதம் 3ஜி/2ஜி/EDGE போன்ற நெட்வொர்க்கில் பயனபடுத்தும் வகையில் இன்டர்நெட் இலவசமாக வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 3 யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 22,990 ஆகும். கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விழாவின் சில படங்கள் மற்றும் இவைகளின் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3


5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9மெகாபிக்சல் கேமரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள ரப்பர் வாரை பல வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.

கேலக்ஸி நோட் 10.1

கேலக்ஸி நோட் 10.1

சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X