8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?
சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையிலும்,பின்பு 6ஜிபி
ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்31 மாடலை ரூ.16,999-விலையிலும் வாங்க முடியம். மேலும் 6ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்31 மாடலை ரூ.17,999-ஆக உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவரும், பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக
இருக்கும்.

கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி டெப்த்
சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் 1080பிக்சல் திர்மானம்
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு
வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








