மலிவு விலையில் கேலக்ஸி ஜே2 (2018) அறிமுகம்.!
குறிப்பாக இப்போது அறிமுகம் செய்ய்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போன் ஆனது கோல்ட், பிளாக், மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கும்.
சாம்சங் நிறுவனம் இப்போது மலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி ஜே2 (2018) மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பாலிகார்பனைட் செய்யப்பட்டுள்ளது என சாம்சங் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஜியோ சார்பில் ரூ.2750 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இப்போது அறிமுகம் செய்ய்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போன் ஆனது கோல்ட், பிளாக், மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஜே2 (2018) :
கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 960x540 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு:
கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையா இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்து.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


விலை:
கேலக்ஸி ஜே2 (2018) ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.8,190-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications