Home
Mobile

5 புதிய மொபைல்போன்கள்: சாம்சங் சரவெடி

By Super
5 புதிய மொபைல்போன்கள்: சாம்சங் சரவெடி

அற்புதமான தனது மேம்படித்தப்பட்ட தொழில் நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து வரும் சாம்சங், 5 புதிய மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்து உள்ளது.இந்த ஐந்து மொபைல்களில் 3 ஸ்மார்ட்போன்கள் டியூவல் வசதி கொண்டது.

கேலக்ஸி வரிசையை இன்னும் விரிவுபடுத்தும் வகையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏஸ் டியோஸ் (எஸ்சிஎச்-ஐ-589), கேலக்ஸி ஒய் ப்ரோ டியோஸ் (ஜிடி-பி-5512), கேலக்ஸி ஒய் டியோஸ் (ஜிடி-எஸ்-6102) என்பவை தான் அந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள். இது அல்லாமல் டியூவல் வசதி கொண்ட மொபைல்கள் வரிசையில் சாம்சங் சேம்ப்

டிலக்ஸ் டியோஸ் (சி-3312) மற்றும் ஸ்டார் 3 டயோஸ் (ஜிடி-எஸ்-5222) மாடல்கள் இடம் பெறுகின்றன.

சாம்சங் கேலக்ஸி ஏஸ் டியோஸ் (எஸ்சிஎச்-ஐ-589) ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. இது சிடிஎம்ஏ வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இதன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் எளிதாக இயங்க 832 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் உள்ளது. தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை தெளிவாக வழங்கும் 8.89

செ.மீ எச்விஜிஏ தொழில் நுட்பம் கொண்ட திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஒய் ப்ரோ டியோஸ் (ஜிடி-பி-5512) ஸ்மார்ட்போனும் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும் டியூவல் சிம் வசதி கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை பெற்றது. 6.5 செ.மீ எல்கியூவிஜிஏ தொடுதிரை தொழில் நுட்ப வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். உயர்ந்த தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் 1,350 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக டியூவல் சிம் வசதி கொண்ட சேம்ப் டீலக்ஸ் டியோஸ் (சி-3312) மொபைல் பற்றிய தகவல்களை சற்று பார்ப்போம். இது கியூவர்டி வடிவமைப்பை பெற்ற மொபைல். இதன் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வசதியையும் பெறலாம். இந்த மொபைல் ஹிந்தி லேன்ங்குவேஜ் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

கேலக்ஸி ஒய் (ஜிடி-எஸ்-6102) ஸ்மார்ட்போன் தொடுதிரை வசதியுடன் கூடிய டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இது 3.14 இஞ்ச் திரை வசதியை வழங்கும். இதில் 832 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் உள்ளது. கேலக்ஸி ஒஸ் ஜிடி-எஸ்-6102 ஸ்மார்ட்போனை ரூ.10,490 விலையிலும் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X