Home
Mobile

புதிதாக 3 பட்ஜெட் போன்களை களமிறக்கியது சாம்சங்

By Super
புதிதாக 3 பட்ஜெட் போன்களை களமிறக்கியது சாம்சங்
நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக 3 பட்ஜெட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங்.

ஸ்டார் டூவோஸ்-2 மற்றும் மெட்ரோ டூவோஸ் சி-3352 என்ற பெயர்களில் இரண்டு டியூவல் சிம் மொபைல்போன்களையும், மெட்ரோ சி-3322 என்ற பெயரில் பட்ஜெட் விலை கொண்ட போனும் இதில் அடங்கும்.

அனைவரும் அதிசயிக்கும் வகையிலே சாம்சங் நிறுவனம் தனது சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டு இருக்கிறது. இதுவரை 14 டியூவல் சிம் கொண்ட ஹேண்டுசெட் மாடல்களை படைத்து சாதனை புரிந்துள்ளது.

இது டச்ஸ்கிரீன் வசதியுடனும், கண்கவரும் தோற்றத்துடனும் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் வகையில் டியூவல் சிம் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 3.15 மெகாபிக்செல் கேமரா 2048 X 1536 பிக்செல் துல்லியம் கொண்டதாக இருக்கிறது. 3.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் வசதியுடன் இதன் திரை விரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதையும் தெளிவாகக் காண்பதற்காகவே இந்த வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களை கவர்கின்ற வகையில் இதில் பேனல் பொருத்தப்பட்டிருக்கிறது.சுலபமான முறையில் டைப் செய்ய வசதியான கீபேட்கள் பொருத்தப்பட்டுள்ளது. உயர்தர தொழில் நுட்ப வல்லுனர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போன் சிறந்த ஒளி நுட்பத்திறனைக் கொண்டுள்ளது. உங்கள் பொழுது போக்குகளை இனிமையாக போக்க வேண்டும் என்பதற்காவே போதிய மல்டிமீடியா வசதிகளை கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட இதன் ஹெட்செட் நம்மை இசை உலகில் மிதக்க செய்யும்.

இதன் மூலமாக உங்களுக்குப் பிடித்தமான இசையைத் தேடி எடுத்து பதிவு செய்து கொள்ள முடியும்.

இது 3.0 வெர்ஷன் புளூடூத் வசதி மற்றும் வைஃபை தொடர்புகோள் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. 30 எம்பி இன்டர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. தேவையெனில், இதன் சேமிப்பு திறனை 16 ஜிபி வரை கூட்டிக்கொள்ள எக்ஸ்பேன்டபிலிட்டி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் ஆக்டிவ் சின்க் வசதியோடு எஸ்என்எஸ், மல்டி ஐஎம், புஷ் மெயில் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தகவல் தளங்களை மிகவும் சுலபமான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மெட்ரோ டியோ சி-3322 டியூவல் மாடல் மூலம் ஃபேஸ்புக்,டிவிட்டர்,யாஹு,எம்எஸ்என்,ஜிடாக் போன்ற வசதியையும் நீங்கள் உபயோகித்து பயன் பெறலாம்.

சி-3322 மாடல் 5.6 இஞ்ச் திரை வசதியும்,2.1 வெர்ஷன் புளூடூத் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுயிருக்கிறது. இப்படி அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதால் மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சேம்சங் மாடலில் அடுத்ததாக பயனளிக்கப் படைக்கப்பட்டிருப்பது மெட்ரோ சி-3752 ஸ்லைடர் ஹேண்ட்செட். இது 5 மெகா பிக்செல் கேமராவை கொண்டது. அது மட்டும் அல்லாது மெட்ரோ டியுவல் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

அனைவரும் ஆச்சர்யத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 6 சென்டி மீட்டர் அளவுகொண்ட டிஎஃப்டி திரை வசதி உள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதால் இதன் விலை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என்று நினைப்பீர்கள்.

ஆனால், சி-3752 மாடலின் விலை வெறும் 5,270 மட்டுமே.மெட்ரோ டியோ மாடலின் விலை ரூ.4,240. மற்றும் ஸ்டார் டியோ-2 மாடலின் விலை ரூபாய் 6,920.இந்த குறைந்த விலையில் இத்தகைய பயனுள்ள ஹேண்செட் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யம் ஊட்டுவதாகத்தான் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X