Home
Mobile

வந்த வேகத்தில் ரூ.2000 தள்ளுபடி.. பளபளன்னு பால் வெள்ளை கலர்.. பக்கா அம்சங்கள்.. கலக்கும் Samsung.. என்ன மாடல்?

சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பட்டியலில்.. சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 சீரீஸ் (Galaxy A50 Series) ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். அதில் இந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி ஏ54 5ஜி (Galaxy A54 5G) அடங்கும்.

அறிமுகமான ஆறே மாதங்களில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிட்-ரேன்ஜ் வரம்பில் மிகவும் பிரபலமான தேர்வாக சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி உருமாறியுள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த ஸ்மார்ட்போனின் புதிய வெள்ளை நிற வேரியண்ட் (New White Color Variant) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வந்த வேகத்தில் ரூ.2000 தள்ளுபடி.. பளபளன்னு பால் வெள்ளை கலர்!

ஆஸம் ஒயிட் (Awesome White) என்று அழைக்கப்படும் இந்த புதிய கலர் ஆப்ஷன் சாம்சங் இந்தியா இணையதளம் (Samsung India Website) வழியாக விற்பனைக்கும் வந்துள்ளது. இந்த கலர் ஆப்ஷன் தற்போது 256ஜிபி ஸ்டோரேஜ் (256GB Storage) ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அதிகாரப்பூர்வ விலை ரூ.38,999 என்றாலும் கூட, ஒயிட் கலர் வேரியண்ட் ஆண்டு ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும் என்று சாம்சங் அறிவித்துள்ளது. அதாவது இது ரூ.2000 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும். இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் வழியாக கிடைக்கும்.

கலரில் மட்டுமே மாற்றம் இருக்கும், மற்றபடி சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. நினைவூட்டும் வண்ணம் இது, மிகவும் கூர்மையான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Viewing Experience) வழங்கும் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் மென்மையான ஸ்க்ரோலிங் எக்ஸ்பீரியன்ஸை (Scrolling Experience) வழங்கும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.4-இன்ச் எஸ்-அமோஎல்இடி டிஸ்பிளேவை (S-AMOLED Display) கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 5.1 (One UI 5.1) உடன் வருகிறது, மேலும் நிறுவனத்தின் சொந்த எக்ஸினோஸ் 1380 சிப்செட் (Exynos 1380 Chipset) சிப்செட் உடனான 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜுடன் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, செல்பீக்களுக்காக 32 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது, பின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் ஓஐஎஸ் (Optical image stabilization - OIS) ஆதரவு உடைந்தன 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

பேட்டரி டிப்பார்ட்மென்ட்டை பொறுத்தவரை, இது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (Fast Charging Support) வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இதில் அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை (Under-display fingerprint sensor) கொண்டுள்ளது.

மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி67 ரேட்டட் வாட்டர் ரெசிஸ்டன்ஸையும் (IP67 Rated Water Resistance) கொண்டுள்ளது. கடைசியாக சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பக்கம் ஆகிய இரண்டிலுமே கொரில்லா கிளாஸ் 5 பேனல்கள் (Gorilla Glass 5 panels) உள்ளன.

சாம்சங் மொபைல் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) மாடலின் மலிவு-விலை வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.4-இன்ச் FHD+ டைனமிக் AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் அல்லது எக்ஸினோஸ் 2200 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-அடிப்படையிலான ஒன் யுஐ 5.1 மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Launched New Awesome White Color Variant of Galaxy A54 5G Smartphone in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X