புதிய Retro Phone-ஐ இறக்கிவிட்டு.. OnePlus, Google Pixel-க்கு செக் வைத்த Samsung.. என்ன மாடல்? என்ன விலை?
சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open), அதற்கு முன்பாக வெளியான கூகுள் பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold) உட்பட பல ஃபிளிப் மற்றும் ஃபோல்டபிள் போன்களுக்கு செக் வைக்கும் நோக்கத்துடன் சாம்சங் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது.
சந்தையில் வாங்க கிடைக்கும் ஃபிளிப் மற்றும் ஃபோல்டபிள் போன்களுடன் போட்டியிட, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மாடல்கள் இருக்கிறதே.. இதற்கிடையில் இன்னொரு ஸ்மார்ட்போனா? அதென்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனின் ரெட்ரோ மாடலை (Samsung Galaxy Z Flip 5 Retro Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இது பில்ட்-இன் ஆண்டெனாவை கொண்ட முதல் ஃபோல்டபிள் சாம்சங் ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது.
கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ரெட்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்ஜிஎச்- இ700 (SGH-E700) மாடலை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்டுள்ளது. அதாவது கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ரெட்ரோ மாடலானது SGH-E700-ல் உள்ள இண்டிகோ ப்ளூ மற்றும் சில்வர் கலர் காம்பினேஷனை பெற்றுள்ளது.

கூடவே 2000-களின் பிக்சல் கிராபிக்ஸின் யுஎக்ஸ் டிசைன் ரீஇன்டர்ப்ரெடெக்ஷன் (UX design reinterpretation of 2000s pixel graphics) மற்றும் சிட்டி ஸ்கேப்பை (Cityscape) சித்தரிக்கும் ஃப்ளெக்ஸ் விண்டோவில் (Flex Window) பிரத்யேக அனிமேஷன் (Exclusive animation) போன்றவைகளையும் பெற்று உள்ளது.
சாம்சங்கின் புதிய கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ரெட்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கொரியா, யுகே, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள நுகர்வோர்கள் இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான சாம்சங்.காம் (Samsung.com) வழியாக வாங்கலாம்.
என்ன விலை? 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ரெட்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.98,500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, இந்த ரெட்ரோ ஸ்மார்ட்போனிற்கும் ஒரிஜினல் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5-க்கும் இடையே அம்சங்களிலும் எந்த வேறுபாடுகளும் இல்லை.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 போனின் அம்சங்கள்: இது 6.7-இன்ச் FHD+ (1080x 2640 பிக்சல்ஸ்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்பிளேவை (120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்) கொண்டுள்ளது. கூடவே 3.4-இன்ச் சூப்பர் AMOLED ஃபோல்டர்-ஷேப்டு கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் பிளாட்ஃபார்மின் கீழ் இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா யூனிட்டுடன் வருகிறது. அதில் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ப்ரைமரி கேமரா + 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உள்ளது. செல்பீக்களுக்கான இதில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது; இது ஃபோல்டிங் டிஸ்பிளேவின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 3700mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








