லுக் அப்படி இருக்கு- அற்புதமான மின்ட் வண்ணத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி: விலை, அம்சம்!

|

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது அற்புதமான மின்ட் வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தை சாதனத்தில் இருந்து இது வண்ணம் மட்டுமே வேறுபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி Awesome Mint மாறுபாட்டுடன் அறிமுகமாகியுள்ளது. இது நான்காவது வண்ண மாறுபாடாக இருக்கும். கடந்த மாதம் 3 வண்ணங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.

கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி

கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி

சாம்சங் இன்று கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி-ன் புதிய வண்ண மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அற்புதமான மின்ட் வண்ண விருப்பத்தோடு நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

சாம்சங் கேலக்ஸி A52s சாதனமானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஆனது ரூ.35,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி வேரியண்ட் விலை ரூ.37,499 ஆக இருக்கிறது. புதிய அற்புத மின்ட் நிறத்தின் 8 ஜிபி வேரியண்ட் சில்லறை கடைகள், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் கிடைக்கிறது.

ரூ.6000 கேஷ்பேக் வசதி

ஸ்மார்ட்போன் எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.6000 கேஷ்பேக் வசதி உடன் கிடைக்கிறது. கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி சாதனத்தின் நான்காவது வண்ண விருப்பம் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே ஆவ்சம் பிளாக், ஆவ்சம் வெள்ளை மற்றும் ஆவ்சம் வயலட் வண்ண விருப்பத்தில் வழங்கப்படுகிறது. புதிய சாதனம் நிற வேறுபாட்டை மட்டுமே கொண்டிருக்கும் எனவும் பிற அம்சங்கள் வழக்கமானது போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. அட்ரினோ 642 எல் ஜிபியூ கொண்ட ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் ஏ52 உடனான ஹூட்டின் கீழ் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவோடு வருகிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளேயின் கீழ் ஆப்டிகல் கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பொறுத்தவரை, இதில் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது. இந்த சாதனம் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது. முன்பக்க கேமரா காட்சியில் துளை பஞ்ச் கட்அவுட் வசதியைக் கொண்டிருக்கிறது.

புது வண்ண மாறுபாடு

புது வண்ண மாறுபாடு

சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ்-ல் கிடைக்கும் இரண்டாவது 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் புது வண்ண மாறுபாடு தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை எச்டிஎஃப்சி வங்கி கார்ட் மூலம் வாங்கும் போது உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சாதனம் மூன்று வண்ண விருப்பத்தில் இருந்த நிலையில் தற்போது நான்காவது வண்ண விருப்பமாக அற்புத மின்ட் வண்ணமும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி 5ஜி சாதனமானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்பட்ட ஒன் யுஐ 3 மூலம் இயக்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் அம்சத்தை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Launched its Samsung Galaxy A52s 5G Smartphones New Awesome Mint Colour Variant: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X