Home
Mobile

Samsung-ன் அடுத்த சம்பவம்.. நிஜமாவே விலை இவ்ளோ கம்மியானு கேட்க வைக்கும்படி புது Galaxy போன் அறிமுகம்!

"உண்மையாகவே இந்த ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவு தானா?" என்று ஆச்சரியப்பட்டு கேட்க வைக்கும் அளவிற்கு மிகவும் மலிவான விலைக்கு, சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை போனாக சாம்சங் கேலக்ஸி ஏ14 (Samsung Galaxy A14) மாடல், இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

ஏனென்றால், இது சாம்சங்கின் பட்ஜெட் விலையிலான ஏ சீரீஸ் மாடலாக இருந்தாலும் கூட இந்தியாவில் ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கும் கேலக்ஸி ஏ34 மாறட்டும் ரூ.40,999 க்கு வாங்க கிடைக்கும் கேலக்ஸி ஏ54 மாடலை போலவே உள்ளது. புதிய கேலக்ஸி ஏ14-ல் 5ஜி ஆதரவு இல்லாவிட்டாலும் கூட, அதுவொரு குறையாகவே இல்லை!

சாம்சங் Galaxy A14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 விலை: சாம்சங்கின் இந்த புதிய போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

மேலும் இது பிளாக், லைட் கிரீன் மற்றும் சில்வர் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.

எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு சலுகையை தவிர்த்து மொபிகுவிக் (MobiKwik) வேலட் மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,500 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும் என்றும் சாம்சங் உறுதியளிக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ14 ஆனது சாம்சங் இந்தியா (Samsung India) இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ பார்ட்னர் சேனல்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 டிசைன் மற்றும் அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க பேனலில் கணிசமான பெஸல்கள் உள்ளன மற்றும் செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்சும் உள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளன. ரூ.20,000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இப்படியொரு நல்ல கேமரா செட்டப் இருப்பது சற்றே வழக்கத்திற்கு மாறானது.

ஏனென்றால், கேலக்ஸி ஏ14 ஆனது ஃபுல்-எச்டி வீடியோக்களை 30fps வேகத்தில் ரெக்கார்ட் செய்யும் திறனை கொண்டுள்ளது. மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மைக்ரோ எஸ்டி கார்டு (1டிபி வரை), டூயல் சிம் கார்டு, சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.

கடைசியாக இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் பாக்ஸ் உடன் சார்ஜர் அனுப்பப்படாது. உங்களிடம் பழைய சார்ஜர் இல்லையென்றால் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ 25W சார்ஜரை ரூ.1,299 க்கு வாங்கிக்கொள்ளலாம். இல்லையேல் டைப்-சி போர்ட் உடன் வரும் இன்னும் விலை குறைவான மூன்றாம் தரப்பு சார்ஜர்களை கூட பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Launched Its New Budget Smartphone in India Check Galaxy A14 Price Speicifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X