3 வருஷம் வாரண்டி, 1 வருட இலவச Knox Suite.. சத்தமின்றி அறிமுகமான Samsung-ன் புதிய எடிஷன்!
சாம்சங் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி இஸட் போல்ட் 7 மாடலின் புதிய எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி இஸட் 7 என்டர்ப்ரைஸ் எடிஷன் (Samsung Galaxy Z Fold 7 Enterprise Edition) ஆகும். இது ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களை இலக்காக கொண்ட சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் வேரியண்ட் ஆனது விரைவில் பிற சந்தைகளிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் இணையதளம் வழியாக சிங்கிள் கலர் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டார்ட் மாடலில் உள்ள அம்சங்களையே கொண்டு இருந்தாலும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும் சாம்சங் நாக்ஸ் சூட்டிற்கான (Knox Suite) ஒரு வருட இலவச அணுகலுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் 7 என்டர்ப்ரைஸ் எடிஷன் விலை: சாம்சங் கேலக்ஸி இஸட் 7 என்டர்ப்ரைஸ் எடிஷன் ஸ்மார்ட்போனானது ஜெட்பிளாக் கலரில், சிங்கிள் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த ஸ்மார்ட்போனின் விலை வெளியிடப்படவில்லை. ஆனால் இது 3 வருட உத்தரவாதத்துடன் வரும், டிவைஸ் மேனேஜ்மென்ட்டிற்கான ஒரு வருட சாம்சங் நாக்ஸ் சூட் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் தற்போது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,74,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,86,999 க்கும் மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.2,10,99 க்கும் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 1968 x 2184 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 368பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- 1080 x 2520 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 422பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 21:9 எக்ஸ்டர்னல் டிஸ்பிளே ரேஷியோ
- ஒரு ஆர்மர் ஃப்ளெக்ஸ்ஹிஞ்சை கொண்டுள்ளது
- கவர் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB வரை ரேம்
- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமரா
- சாம்சங்கின் ப்ரோவிஷுவல் எஞ்சினின் புதிய வெர்ஷன்
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான யுஐ 8 ஓஎஸ்
- ஜெமினி லைவ், ஏஐ ரிசல்ட்ஸ் வியூ, சர்க்கிள் டு சர்ச், டிராயிங் அசிஸ்ட், ரைட்டிங் அசிஸ்ட் போன்ற பல ஏஐ அம்சங்கள்
- 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- 5ஜி, எல்டிஇ, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- மேம்பட்ட ஆர்மர் அலுமினிய ஃபிரேம் - ஐபி48 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4400mAh பேட்டரி
- 25W அடாப்டர் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்
- பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவு
- அளவீட்டில் விரிக்கப்பட்ட நிலையில் 4.2 மிமீ தடிமன்; மடிக்கும்போது 8.9 மிமீ தடிமன்
- எடை 215 கிராம்


Click it and Unblock the Notifications








