நம்ப முடியாத பட்ஜெட் விலை.. Samsung இறக்கிவிட்ட 2 போன்கள்.. 5000mAH பேட்டரி, 50MP கேமரானு சும்மா கலக்குது!
சாம்சங் அதன் கேலக்ஸி ஏ-சீரிஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமாக இவ்விரு மாடல்களுமே சூப்பர்-பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வெளியாகியுள்ளது. அதென்ன மாடல்கள்? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களாக கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போதைக்கு தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ்விரு மாடல்களும் நிச்சயம் இந்தியாவிற்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்; ஆனால் அதுகுறித்த சரியான விவரங்கள் இல்லை.

இவ்விரு போன்களுக்கும் உள்ள பொதுவான அம்சங்கள்: இந்த இரண்டு ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே 50எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கின்றன. மேலும் இரண்டுமே பிளாக், சில்வர் மற்றும் லைட் க்ரீன் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ05 விரிவான அம்சங்கள்: இது 720 x 1600 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.7 இன்ச் எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது: 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் +128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்.
ஒருவேளை 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உங்களுக்கு போதவில்லை என்றால், மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இதன் மெமரியை மேலும் விரிவாக்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த லேயர் ஒன் யுஐ கோர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 8எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. கடைசியாக சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் ஆனது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் விரிவான அம்சங்கள்: இது 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் (Qualcomm Snapdragon 680 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 128ஜிபி வரையிலான ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் வருகிறது.
இந்த பட்ஜெட் விலை சாம்சங் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. டூயல் சிம் சப்போர்ட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் கேலக்ஸி ஏ05 மாடலை போலவே 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ05 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ05 விலை நிர்ணயம்: தாய்லாந்தில் சாம்சங் கேலக்ஸி ஏ05 மாடலின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.9842 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் மாடலின் விலையை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை. பெரும்பாலும் இதன் விலையும் ரூ,10,000 - ரூ.12,000ஐ சுற்றித்தான் தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








