Home
Mobile

முத்தான விலைகளில் 3 புது Samsung போன்கள் அறிமுகம்.. ரூ.6000, ரூ.7000, ரூ.8000 பட்ஜெட்டில்.. என்னென்ன மாடல்கள்?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் எம், எஃப் மற்றும் ஏ சீரிஸின் கீழ் மூன்று புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்ன மாடல்கள்? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன? என்ன விலைக்கு வாங்க கிடைக்கின்றன? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? சாம்சங் நிறுவனம் அதன் எம் சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07) மாடலையும், எப் சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எப்07 (Samsung Galaxy F07) மாடலையும் மற்றும் ஏ சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.

முத்தான விலைகளில் 3 புது Samsung போன்கள் அறிமுகம்!

என்னென்ன அம்சங்கள்? கேலக்ஸி எம்07, கேலக்ஸி எப்07 மற்றும் கேலக்ஸி ஏ07 ஆகிய 3 ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியான அம்சங்களையே கொண்டு உள்ளன. ஆனால் இவைகள் - வெவ்வேறு கலர் ஆப்ஷன்களின் கீழ் வெவ்வேறு விலை நிர்ணயத்தின் கீழ் வாங்க கிடைகின்றன.

சாம்சங் கேலக்ஸி எம்07, எப்07 மற்றும் ஏ07 ஆகிய 3 மாடல்களுமே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எல்பிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் இந்த 3 மாடல்களுமே ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன. கூடுதல் நீடித்து நிலைக்கும் தன்மைக்காக இந்த ஸ்மார்ட்போன்கள் கிளாஸ் பைபர் ரெயின்போர்ஸ்டு பாலிமர்-ஐ (Glass Fiber Reinforced Polymer) கொண்டுள்ளன.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. நல்ல கேமிங் திறனிற்காக இந்த ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக்கின் ஹைப்பர்எஞ்சின் 2.0 லைட் தொழில்நுட்பமும் (MediaTek's HyperEngine 2.0 Lite Technology) உள்ளது.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த போன்கள் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 7 (One UI 7) கொண்டு இயங்குகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு 6 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, சாம்சங்கின் இந்த 3 புதிய ஸ்மார்ட்போன்களுமே 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் ஆகியவற்றை கொண்டுள்ளன. கூடவே மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 2டிபி வரை விரிவாக்க கூடிய ஆதரவையும் வழங்குகின்றன

கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன்களில் 50எம்பி ஆட்டோஃபோகஸ் பிப்ரைமரி சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளன. முன்பக்கத்தில், வீடியோ மற்றும் செல்பீக்களுக்காக 8எம்பி கேமரா உள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன்கள் 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளன.

என்ன விலை? முன்னரே குறிப்பிட்டபடி - சாம்சங் கேலக்ஸி எம்07, சாம்சங் கேலக்ஸி எப்07 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ07 ஆகிய 3 மாடல்களும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருந்தாலும் கூட, சற்று முன்-பின் ஆன விலைகளின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்07 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது லைட் வயலட், க்ரீன் மற்றும் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக சாம்சங் கேலக்ஸி எம்07 4ஜி ஸ்மார்ட்போனின் க்ரீன் கலர் ஆப்ஷன் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Launched 3 New Budget Price 4G Phones in India Galaxy M07 A07 F07 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X