அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய மொபைல் - சாம்சங் அறிவிப்பு

By Super
|
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய மொபைல் - சாம்சங் அறிவிப்பு

கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் மொபைல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அயராது பாடுபட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்-2 போன்கள் பல மொபைல் நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன.

கேலக்ஸி எஸ்-2 மொபைல்களுக்கு மவுசு குறையாத நிலையில், அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங். அறிமுகம் செய்யப்பட்டு 55 நாட்களில் 3 மில்லியன் கேலக்ஸி எஸ்-2 மொபைல்கள் விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. அதேபோல் கேலக்ஸி எஸ்-3 மொபைல்களும் வரலாற்று சாதனை படைக்கும் என நம்பலாம்.

கேலக்ஸி எஸ்-3 போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சாம்சங்கின் தலைவர் அறிவித்திருக்கிறார். மேலும், 4ஜி காலம் தொடங்கிவிட்டதால் 4ஜி நெட்வொர்க் சப்போர்ட்டுடன் கேலக்ஸி எஸ்-3 மொபைல்கள் வரும் என்று அறிவித்திருக்கிறார்.

கேலக்ஸி எஸ்-3 நவீன தொழில் நுட்பத்துடனும் அதே நேரத்தில் புதிய வசதிகளுடனும் வரும் என எதிர்பார்க்கலாம். புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-3 போன் 4.5 இஞ்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி தொடுதிரை கொண்டிருக்கும். இதில், 12 மெகா பிக்ஸல் கேமார பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சிபியு என்விஐடிஐஎ மற்றும் ஆர்எஸ்க்யுஒச எஸ் கேஎஎல்-இஎஸ் மார்க் என்ற அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கேலக்ஸி எஸ்-3 விரைவில் இந்தியாவிற்கு வருவதை வாடிக்கையைளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த புதிய மொபைல் இந்தியாவிற்கு வந்துவிடும் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X