அனைத்து வசதிகளுடன் புதிய ஸ்மார்ட்போன்: சாம்சங் ஆயத்தம்

இன்னும் வாடிக்கையாளர்கள் கைக்கு வராத இந்த சாம்சங் இல்லூஷன் மொபைல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதில் 4ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் வசதியுடன் இல்யூஷன் வரும் என்று தெரிகிறது. 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த மாடல் மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. அதோடு இதல் பிராக்ஸிமிட்டி, யூஐ ஆட்டோ ரொட்டேட், ஆட்டோ டர்ன் போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலை இன்னொரு ஸ்மார்ட் மொபைலுடனோ, அல்லது பர்சனல் கம்ப்யூட்டருடனோ இணைக்க முடியும்.
இதில் வைபை மற்றும் புளூடூத் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஜிபிஎஸ் வசதியையும் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்தி பயன்பெற முடியும். இதன் ஆடியோ, வீடியோ ப்ளேயர், போன்ற வசதிகளால் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவில்லை என்று கூறலாம்.
சாம்சங் இல்லூஷன் மாடலில் ஆற்றல்வாய்ந்த பேட்டரி மற்றும் போதுமான மெமரி சப்போர்டும் இருக்கும் என்று கருதப்படுகிறது. அடோப் ஃப்ளாஷ் வசதியும் இத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். இதன் வசதிக்கேற்ற வகையில் விலையும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications