Home
Mobile

வந்து 1 மாதமே ஆன புது Samsung 5ஜி போன் மீது மெகா விலை குறைப்பு.. ரூ.13,000 பட்ஜெட்டுக்கு இறங்கியது!

கடந்த மாதம், அதாவது கடந்த 2025 அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகமான ஒரு லேட்டஸ்ட் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் (Samsung 5G Smartphone) மீது, அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது மிகப்பெரிய விலைக்குறைப்பு அறிவித்துள்ளது.

அது சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போன் ஆகும். அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 விலை குறைக்கப்பட்டு ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது. பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் உடன் விலையை இன்னும் குறைக்கலாம். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வந்து 1 மாதமே ஆன புது Samsung 5ஜி போன் மீது மெகா விலை குறைப்பு!

சுவாரசியமாக அமேசான் இந்தியா அறிவித்துள்ள இந்த விலை குறைப்பு சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் சபையர் பிளாக் (Sapphire Black) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற வேரியண்ட்களின் விவிலைகளை பொறுத்தவரை..

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- எப் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் (1,080 x 2,340 பிக்சல்ஸ்)
- 9 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன்
- 6.7-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே

- 5 என்எம் எக்ஸினோஸ் 1330 சிப்செட்
- 8 ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 எம்பி ப்ரைமரி சென்சார்

- 5 எம்பி அல்ட்ரா-வைட் ஷூட்டர்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 13எம்பி செல்பீ கேமரா
- 25W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 5000mAh பேட்டரி (பெட்டியில் சார்ஜர் இருக்காது)

- 7.5 மிமீ ஸ்லிம் டிசைன்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 54 ரேட்டிங்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 ஓஎஸ்
- 6 வருட மேஜர் ஓஎஸ் அப்டேட்ஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும்.

முன்னதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- அதிகபட்சமாக 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

- 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 13எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம்
- டேப் அண்ட் பே ஆதரவு கொண்ட சாம்சங் வேலட்
- சாம்சங் குவிக் ஷேர்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Latest 5G Smartphone Galaxy M17 5G gets Rs 2500 Price Cut in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X