சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

|

சாம்சங் நிறுவனம் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம் 02 மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் தற்பொழுது வெளிவந்துள்ளது. கேலக்ஸி எம் 02 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை இந்த தகவல் குறிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 02

சாம்சங் கேலக்ஸி எம் 02

வரவிருக்கும் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியாவின் ஆதரவு பக்கத்தில் SM-M025F எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆதரவு பக்கம் ஸ்மார்ட்போனின் எந்த விவரங்களையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம் 01 வாரிசு

கேலக்ஸி எம் 01 வாரிசு

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 01 வின் வாரிசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கேலக்ஸி எம் 02 அறிமுகம் குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு நாம் சிறிது காத்திருக்கத் தான் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி M02 விவரக்குறிப்புகள்

எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி M02 விவரக்குறிப்புகள்

சாம்சங் இந்தியாவின் ஆதரவு பக்கத்தில் பட்டியலிடப்பட்ட மாதிரி எண் கீக்பெஞ்சில் காணப்பட்ட அதே மாதிரி எண்ணுடன் ஒத்துப்போகிறது. கீக்பெஞ்ச் பட்டியலின் படி, இந்த போன் ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இது அண்ட்ராய்டு 10 அவுட்-ஆஃப்-பாக்ஸ் உடன் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும். கீக்பெஞ்ச் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எம் 02 சிங்கிள் கோர் மதிப்பெண் 128 மற்றும் மல்டி கோர் ஸ்கோர் 486 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எம் 02 BIS சான்றிதழ்

சாம்சங் கேலக்ஸி எம் 02 BIS சான்றிதழ்

முன்னதாக, சாம்சங் கேலக்ஸி எம் 02, இந்திய தர நிர்ணய பணியகம் (பிஐஎஸ்) சான்றிதழ் வலைத்தளத்திலும் தோன்றியது, அதாவது இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஸ்மார்ட்போன் மாதிரி எண் SM-025F / DS உடன் வரும் என்று BIS சான்றிதழ் வெளிப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் டூயல் சிம் செயல்பாட்டை ஆதரிக்கும் என்று தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 02 போன்

சாம்சங் கேலக்ஸி எம் 02 போன்

சாம்சங் கேலக்ஸி எம் 02 போன், 5.71' இன்ச் எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவுடன் 1560 x 720 பிக்சல் உடன் ஒன்யூஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது, மேலும் இது 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

கேமரா

இரட்டை கேமரா அமைப்புடன் 13 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்றும், முன்பக்கத்திற்கு, 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டரை கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung is gearing to launch a new budget smartphone Samsung Galaxy M02 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X