சாதனையாளர்களுக்கான புதிய கேலக்ஸி போன்: சாம்சங் அறிமுகம்

Posted By: Staff

சாதனையாளர்களுக்கான புதிய கேலக்ஸி போன்: சாம்சங் அறிமுகம்
ஒரு சிலருக்கு வாழ்க்கை என்பது கரடுமுரடான மலைகளையும், ஆர்ப்பரிக்கும் அலைகளையும் தைரியமாக எதிர்கொண்டு சாதிப்பதாகும். அப்படி சாதிக்க விரும்புவோருக்காகவே வருகிறது சாம்சங் எக்ஸ்கவர். இதை ஒரு கடினமான மொபைல் என்றே கூறலாம்.

ஏற்கனவே மோட்டோரோலா ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரீட் ரக்டு ஸ்மார்ட் போன்களை சாம்சங்கும், மோட்டாரோலாவும் அறிமுகப்படுத்திவிட்டன. அதைவிட சிறந்த ஆண்ட்ராய்டு ரக்டு போனாக சாம்சங் எக்ஸ்கவர் இருக்கும் என நம்பலாம். கடந்த வருடம் சாம்சங் எக்ஸ்கவர் 271 என்ற அடிப்படை வசதி கொண்ட ரக்டு போனை அறிமுகப்படுத்தியது. ஆனால் சாம்சங் காலக்ஸி எக்ஸ்கவர் இன்னும் நவீனமாக இருக்கும் என நம்பலாம்.

இந்த மொபைல் ஐபி67 சான்றிதழுடன் வருவதால் இதை கரடுமுரடாக பயன்படுத்தினாலும் இதற்கு அதிக பாதிப்பு இருக்காது. மேலும் தூசு மற்றும் தண்ணீரலிருந்த பாதுக்க இதில் ப்ரூப் வசதியும் உள்ளது. 30 நிமிடங்கள் இது தண்ணீரில் மூழ்கி இருந்தாலும் இந்த மொபைல் பாதிக்கப்படுவதில்லை.

இந்த மொபைல் க்வாட் பேண்ட் ஜிஎஸ்எம் ஆகும். இதன் டூவல் பேண்ட யுஎம்டிஎஸ்/ ஹச்எஸ்டிபிஎ 7.2எம்பிபிஎஸ் வேகத்தைக் கொண்டிருக்கிறது. இதன் திரை கீறல் விழாத வகையில் கடின கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கிறது. இது 800 எம்ஹச்ஸட் ப்ராஸஸரை கொண்டிருக்கிறது. மேலும் இது 150 எம்பி இன்டர்னல் சேமிப்பு வசதியையும் பெற்றிருக்கிறது. மைக்ரோஎஸ்டி மூலம் இதன் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

தொடர்பு வசதிக்காக டபுள்யுஎல்எஎன் 802.11 பி/ஜி/என் வழங்குகிறது. மேலும் நவீன 3.0 ப்ளுடூத் மற்றும் எல்இடி ப்ளாஷ் மற்றும் ப்ளாஷ் கொண்ட 3.2 மெகா பிக்ஸல் கேமராவையும் வழங்குகிறது. அதோடு வீடியோ கால் விஜிஎ முகப்பு கேமராவும் வழங்குகிறது.

சாம்சங் காலக்ஸி எக்ஸ்கவர் மொபைலின் தனி சிறப்பு எந்த ஒரு கடின சூழலிலும் இந்த மொபைலை அச்சமின்றி பயன்படுத்த முடியும். மேலும் அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எத்தனை முறை கீழே விழுந்தாலும் எளிதில் பழதடையாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot