கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.!

|

சாம்சங் நிறுவனம் தற்போது அதன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குமுன்பு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை வெளியிட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

மாறுபட்ட எஸ் பென்

குறிப்பாக ஸ்டார் வார்ஸ் ரசிகர்களை கவரும் வண்ணம் இது முழுக்க முழுக்க ஸ்டார் வார்ஸ் தீம்களை பின்பற்றிவடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு வண்ணத்தில் ஒரு மாறுபட்ட எஸ் பென் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்மார்ட்போன்.

1,299 அமெரிக்க டாலர்கள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் சாதனத்தின் விலை1,299 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.93,500-ஆக உள்ளது. மேலும் அமெரிக்காவில் அமேசான்
தளம் வழியாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ

டிசம்பர் 13

அதன்பின்பு பெஸ்ட் பை மற்றும் மைக்ரோசாஃப்ட் ஸ்டோர்கள், சாம்சங்.காம் மற்றும் சாம்சங் எக்ஸ்ப்பிரியன்ஸ் வழியாகடிசம்பர் 13-ம் முதல் வாங்க கிடைக்கும். அமெரிக்காவை தொடர்ந்து டென்மான்ர்க், பிரான்ஸ், ஹாங்காங், ஆஸ்திரேலியா, கொரியா ரஷ்யா, ஸ்பெயின் சுவீடன் துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

கேலக்ஸி நோட் 10 பிளஸ்

சாம்சங் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது வடிவமைப்பிற்காக மாறுபட்ட சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களும், பின்புறத்தில் தனித்துவமான பர்ஸ்ட் ஆர்டர் லோகோ மற்றும் ஸ்டார் வார்ஸ் பிராண்டிங்கை தவிரஇந்த கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் ஆனது சில கஸ்டம் டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி நோட் 10 பிளஸ்

கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் சாதனத்தில் ஷட்டவுன் அனிமேஷன்கள், பிரத்தியேக ஸ்டார் வார்ஸ்தீம், வால்பேப்பர்கள், ஐகான்கள்,மற்றும் ட்யூன்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில்
பாக்சில் கஸ்டம் கேஸ், ஒரு உலோக பேட்ஜ், ஒரு சிவப்பு நிற எஸ் பென் மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான
கேலக்ஸி பட்ஸ் ஆகியவைகளும் உள்ளன.

டிசம்பர் 20

இருந்தபோதிலும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் சாதனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில்விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் டிசம்பர் 20-ம் தேதி தி ரைஸ் ஆஃப் ஸ்கைவால்கர் திரைப்படம்
ஆனது வெளியிடப்படுகிறது. இதற்கு அடித்தளமாக தான் இப்போது சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Introduced Galaxy Note 10+ Star Wars Special Edition : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X