Home
Mobile

இன்று சாம்சங் ரெப், சொல்யூசன் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
இன்று சாம்சங் ரெப், சொல்யூசன் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் என்ற பெயர் அத்துபடி. சாம்சங் நிறுவனம் மொபைல்கள் மட்டுமல்லாமல் நிறைய எலக்ட்ரானிக் பொருட்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர் மத்தியில் நன் மதிப்பை பெற்ற பிராண்டாக திகழும் சாம்சங் தற்போது ரெப் மற்றும் இல்யூஷன் என்ற இரண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது.

இந்த இரண்டு மாடல்களுமே சிடிஎம்ஏ 1எக்ஸ் இவி-டிஓ, 3ஜி மற்றும் சிடிஎம்ஏ 800/1900 2ஜி நெட்வொர்க் தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது. 3ஜி, 2ஜி வசதிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் ஒரு பயன் என்னவென்றால், பணம் போட்டு வாங்கும் அந்த மொபைல் சிறந்த தொழில் நுட்பத்தை கொடுக்குமா என்பது தான்.

இல்யூஷன், ரெப் என்ற மொபைல்களில் தொழில் நுட்பம் பற்றி எந்த விதமான பயமும் இருக்க தேவையில்லை. இந்த மொபைல்களில் உள்ள 2ஜி மற்றும் 3ஜி வசதியை மூலம் அதிவேக நெட்வொர்க்கை வசதியை பெற்று மகிழலாம்.

சாம்சங் ரெப் மொபைல் தனது முன்பக்கத்தில் 4 பட்டன்களுடன், அழகான தோற்றத்தையும் கொண்டது. இல்யூஷன் மொபைலிலும் அதே போல் முன்பக்கம் நான்கு பட்டன்கள் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரெப் மொபைல் 105 கிராம் எடை கொண்டது, ஆனால் இல்யூஷன் மொபைல் சற்று கூடுதலாக 120 கிராம் எடை கொண்டது. இந்த மொபைல்களை எளிதாக கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொபைல்களுமே டிஎப்டி திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். இதனால் 320 X 480 பிக்ஸல் துல்லியத்தை வழங்கும். சாம்சங் இல்யூஷன் மொபைலின் திரை கொஞ்சம் கூடுதல் வசதியை அளிக்கிறது. இது 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது.

இரண்டு மொபைல்கள் பற்றிய கேமரா வசதியும் தெரிந்து கொள்வதற்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. இதன் 3 மெகா பிக்ஸல் கேமரா 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தையும் தருகிறது. இந்த மொபைல்களில்

1ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ8 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிராசஸர் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எளிதாக இயங்க பெரிதும் துணை புரிகிறது. இல்யூஷன், ரெப் மொபைல்கள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு இயங்குகிறது.

இல்யூஷன், ரெப் ஸ்மார்ட் மொபைல்கள் ஆக்சிலரோமிட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார் போன்ற தொழில் நுட்பங்களை கொண்டுள்ளன. மைக்ரோஎஸ்டி மெமரி கார்டு மூலம் 32ஜிபி வரை தகவல்களை சேகரிக்கலாம். இந்த இரண்டு மொபைல்களிலுமே 2 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும், 512எம்பி ரேம் வசதியும் உள்ளது. இதில் ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை போன்ற தொழில் நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், இன்டர்நெட் பிரவுசிங் வசதிக்கு பஞ்சமே இல்லை.

இதில் புளூடூத் வசதி கூட கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக ஏ2டிபி வி3.0 புளூடூத் வசதியும், யூஎஸ்பி 2.0 வசதியும் உள்ளது. ரெப், இல்யூஷன் மொபைல்கள் 1,500 எம்ஏஎச் பேட்டரியை வழங்கும்.

ஏராளமான தொழில் நுட்பங்களை எடுத்துக் கொண்டு மக்களை சந்திக்க வந்திருக்கிறது சாம்சங் இல்யூஷன் மற்றும் ரெப். இதன் விலை பட்டியல் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X