1060 மணி நேரம் ஸ்டான்ட்-பை டைம் கொடுக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்!

ஒவ்வொரு நிறுவனமும் எந்த அளவுக்கு சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கும் என்பதை பொறுத்து தான் அதன் மதிப்பு வாடிக்கையாளர்களின் மத்தியில் பெருகும். அதன் அடிப்படையில் இந்த சாம்சங் நிறுவனம் சிறப்பான தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போனையும், மலிவு விலை போனையும் வழங்கி மக்களுக்கு ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில், அனைத்து வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பிரசித்தி பெற்ற நிறுவனமான சாம்சங், ஐ-6172 என்ற மொபைலை உருவாக்கி இருக்கிறது. இதில் 3.2 இஞ்ச் திரை வசதியினையும் பெற்றுள்ளது. இதன் டிஎப்டி டச் திரை தொழில் நுட்பம் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி ரிசீவர் வசதியினையும் இந்த ஐ-6172 என்ற ஸ்மார்ட்போனில் பெற்று பயனடையலாம்.
இது போன்ற பிரபலமான மொபைல் நிறுவனங்களில் இருந்து வெளிவரும் மொபைல்களில் அதிக தொழில் நுட்ப வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ-6172 ஸ்மார்ட்போன் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல் வாய்ந்த பேட்டரியை பெற்றுள்ளதால் இதில் 13.33 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 1060 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் பெற முடியும்.
3.0 புளூடூத் வசதி மற்றும் யூஎஸ்பி 2.0 போன்ற வசதிகள் இதில் மிக சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரவுசிங் வசதியினையும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் பெறலாம். இந்த ஐ-6172 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் விலை அனைவராலும் விரும்பப்படும் வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications