நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

வடிவமைப்பிலேயே தனது ஸ்டைலை காட்டி அசத்துகிறது சாம்சங் ஹியூகோ பாஸ் மொபைல்.
இந்த புதிய மொபைல் வாடிக்கையாளர்களுக்காக சற்று வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹியூகோ பாஸ்மொபைல் மக்களுக்கு கிறிஸ்மஸ் பரிசாக வருகிறது. இந்த மொபைலில் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் எஃப்-480 என்ற மொபைலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த ஹியூகோ பாஸ் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஹியூகோ பாஸ் மொபைல் நிச்சயம் வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்பட வைக்கும்.
இந்த மொபைலின் வெளி தோற்ற வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமாக செய்யப்பட்டுள்ளது. ஹியூக பாஸ் மொபைல் 3.5 இஞ்ச் அகன்ற திரையை கொண்டுள்ளது.
இதனால் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்கும். இதில் 800 மெகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பிராசஸர் ஆன்ட்ராய்டு 2.3.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சிறப்பாக இயங்குவதற்கு பெரிதும் துணை புரிகிறது.
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனால், ஆன்ட்ராய்டு மார்கெட்டில் தற்சமயம் வெளிவந்த ஏராளமான அப்ளிக்கேஷன்களை இதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதில் பொருத்தப்பட்டிருக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படங்களை அழகாக எடுக்கலாம். புளுடூத், வைஃபை போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் இந்த மொபைல் வழங்கும்.
பல நவீன வசதிகளை கொண்ட இந்த சாம்சங் ஹியூகோ பாஸ் மொபைலை பெற அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
அடுத்த மாதம் கடைகளிலும், ஆன்-லைன் ஸ்டோர்களிலும் இந்த மொபைலை பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றது.


Click it and Unblock the Notifications