Home
Mobile

சாம்சங் ஸமார்ட்போன்களுக்கு அதிரடி விலை உயர்வு.! எந்தெந்த மாடல்கள்?

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 மற்றும் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகளை உயர்த்தியுள்ளது. அதாவது இந்தியாவில் சீன பொருட்களின் மீதான வெறுப்பை இந்த தென்கொரிய பிராண்ட பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் தெரிகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் நம்புகிறது.

 எம்21 ஸ்மார்ட்போன்

இப்போது அறிவிக்கப்பட்ட விலை உயர்வு இரண்டு ஸ்மார்ட்போன்களின் அனைத்து மெமரி வகைகளுக்கும் பொருந்தும். வெளிவந்த
தகவலின்படி கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ரூ.14,499-விலையிலும், கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ரூ.17,499-க்கும் கிடைக்கும். அதாவதுகூடுதலாக ரூ.500-விலையை உயர்த்தியுள்ளது இந்நிறுவனம்.

வரை உயர்த்தி வருகிறது

அதேபோல் சியோமி நிறுவனமும் சந்தையில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.1500-வரை உயர்த்தி வருகிறது.விரைவில் அனைத்து சீன நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களின் மீது விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சாம்சங் கேலக்ஸி எம்21  டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்21 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி எம்21 கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்21 கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்21 பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்21 பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது. 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்31 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம்31 சிப்செட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்31  டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்31 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின்
பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 சாம்சங் கேலக்ஸி எம்31 பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்31 பேட்டரி

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung hikes prices of Galaxy M21 and Galaxy M31 and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X