சாம்சங்கிடமிருந்து வரும் புதிய பட்ஜெட் போன்!

மொபைல்கள் மற்றவர்களை தொடர்பு கொள்வதற்கு மட்டும் என்றிருந்த நிலை மாறி, தற்போது ஏராளமான வசதிகளை தரும் சாதனம் என்றாகிவிட்டது. இதனால் ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு மொபைல்களில் நிறைய வசதிகளை கொடுத்து கொண்டே இருக்கின்றன.
இதுபோன்ற அதிக வசதிகளை தரும் தொழில்நுட்பங்களுடன் மொபைல்களை தருவதில் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த வகையில் தற்போது அடிப்படை வசதிகள் கொண்ட ஹீரோ மியூசிக் இ-123-பி என்ற புதிய மொபைலை சாம்சங் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஹீரோ மியூசிக் இ-123-பி மொபைல் இரண்டு நெட்வொர்கிற்கு சப்போர்ட் செய்யும் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல். இது 1.8 இஞ்ச் திரை வசதி கொண்டது. அடிப்படை வசதி கொண்ட மொபைல் என்பதால் கேமரா இல்லை.
இந்த மொபைலில் ஆடியோ மற்றும் எப்எம் ரேடியோ வசதியினை பெற முடியும். புளூடூத் தொழில் நுட்பம் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எப்எம் ரேடியோவின் மூலம் எந்த நேரம் வேண்டுமானாலும் இனிமையான இசையை கேட்கலாம். ஹீரோ மியூசிக் இ-123-பி மொபைலின் முக்கிய விஷயமே இதன் பேட்டரி வசதிதான்.
இதன் பேட்டரி 11.1 மணி நேரம் டாக் டைம் மற்றும் 580 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் கொடுக்கிறது. இதனால் பேசி கொண்டிருக்கையில் பேட்டரி இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற கவலை இருக்காது.
இந்த சாம்சங் ஹீரோ மியூசிக் இ-123-பி விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த மொபைல் போன் அடுத்த மாதம் இந்திய சந்தையில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications